வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நம் நாடு உட்பட உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து யோகா செய்யும் பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், மிகவும் வித்தியாசமான வீடியோ ஒன்றும் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த பிறகு உங்களுக்கும் தலை சுற்றும்.


இந்த வீடியோவில், ஒரு நபர் சாலையில் உள்ள சைன்போர்டுக்கு மேல் புஷ்அப் செய்வதைக் காண முடிகின்றது. உடற்பயிற்சி கூடம், பூங்கா அல்லது காலி மைதானங்களில் பலர் உடற்பயிற்சி செய்வதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் இந்த வழியில் இப்படி ஒருவர், சைன்போர்டில் புஷ்அப் செய்வதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இதை பார்த்தால், அதிர்ச்சியும் பதட்டமும் ஒன்றாக நம்மை ஆட்கொள்கின்றன. 


சைன் போர்டில் புஷ்அப் செய்யும் நபர்


இன்று, உலகமே யோகா தினத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கும் வேளையில், ​​ஒடிசாவின் போலங்கிர் மாவட்டத்தில் இருந்து இப்படியொரு வீடியோ வெளியாகியுள்ளது. இது காண்பவர்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. இங்கு ஒருவர் தனக்கே உரித்தான பாணியில் புஷ்அப் செய்வதைக் காண முடிகின்றது. 


மேலும் படிக்க | காட்டு ராஜாவுக்கு இப்படி ஒரு நிலையா? பட்டினியால் சிங்கம் செய்த செயல்: வீடியோ வைரல்


வீடியோவில் காணப்படும் நபர் சாலையில் இருக்கும் ஒரு சைன் போர்டு மீது ஏறி புஷ்அப் செய்யத் தொடங்குகிறார். இதைத் தொடர்ந்து அவ்வழியாகச் சென்றவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி அவரைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால் அவர் இதையெல்லாம் கண்டும் கலங்காமல் புஷ்-அப் செய்து கொண்டே இருக்கிறார். அவ்வாறு செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை வீடியோவை பார்த்தால் புரிந்துகொள்ள முடிகின்றது. இப்படிப்பட்ட நேரங்களில் ஒரு சிறு கவனக்குறைவு கூட உயிருக்கே ஆபத்தாகலாம். 


மனதை பதபதைக்க வைக்கும் புஷ் அப் வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் ambalpuri_mahani._andpatnagarh_top_models என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. சமூக ஊடகங்களில் இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, இணையவாசிகள் இதற்கு தொடர்ந்து பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர் 'இவர்தான் நம் நாட்டு ஸ்பைடர் மேன்’ என எழுதியுள்ளார். மற்றொரு பயனர் இதை 'ஸ்டேஜ் ஷோ' என்று அழைத்தார். மற்றொரு பயனர் 'அந்த நபர் மது அருந்தி இருப்பார். அதன் காரணமாகத்தான் ஆபத்தை உணராமல் இவ்வாறு செய்கிறார்’ என கருத்து தெரிவித்துள்ளார். இதுபோன்ற பல கருத்துக்கள் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ பழையதாக இருந்தாலும் இன்று யோகா தினத்தில் வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது. இவரைப் பார்க்க ஏராளமானோர் அங்கு திரண்டதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ஏழைப்பெண்... பணக்கார நாய்... பந்தால் உருவான பந்தம்: உருகும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ