ஏழைப்பெண்... பணக்கார நாய்... பந்தால் உருவான பந்தம்: உருகும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Dog Viral Video: மனதை அள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. ஒரு நாய்க்கும் சிறுமிக்கும் இடையில் இருக்கும் அற்புதமான நட்பு இதில் காணக்கிடைக்கின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 21, 2023, 11:39 AM IST
  • வீடியோவின் தொடக்கத்தில் ஒரு சிறுமி ஒரு பெரிய வீட்டின் முன்னால் நின்றுகொண்டிருப்பதை காண முடிகின்றது.
  • அந்த வீட்டிற்குள் வளர்ப்பு நாய் ஒன்று உள்ளது.
  • தோற்றத்தை வைத்து அந்த சிறுமி மிக ஏழ்மையான நிலையில் இருப்பதை கணிக்க முடிகின்றது.
ஏழைப்பெண்... பணக்கார நாய்... பந்தால் உருவான பந்தம்: உருகும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமூக ஊடகங்களில் குரங்கும், யானை, நாய், பூனை ஆகிய சில மிருகங்களுக்கு எப்போதும் அதிக மவுசு உள்ளது. நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு. அதுமட்டுமல்ல, அது மிகவும் புத்திசாலியான விலங்காகவும் உள்ளது. நாயின் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. நாம் ஆச்சரியப்படும் பல விஷயங்களை செய்து நாய்கள் நம்மை அசத்துவது உண்டு. நாய்கள் வளர்க்கப்படும் வீடுகளில் அவை வீட்டின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகின்றன. நாய்களும் தங்கள் முதலாளிகள் மீதும், வளர்க்கப்படும் வீட்டு உறுப்பினர்கள் மீதும் அளவுகடந்த பாசத்தை காட்டுகின்றன. 

சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஒரு பணக்கார வீட்டு நாய் செய்யும் ஒரு செயல் பெரும் ஆச்சரியத்தை வரவழைக்கின்றது. இது இணையவாசிகள் இடையே பல வித கமெண்டுகளை வரவழைத்துள்ளது. 

பொதுவாக நாய், ‘மனிதனின் நண்பன்’ என அழைகப்படுகின்றது. அவை மனிதர்களோடு பழகும் விதமும், காட்டும் பாசமும், விளையாடும் அழகும் காண்பதற்கு மிக கியூட்டாக இருக்கும் விஷயங்கள் ஆகும். இந்த நிலையில், இந்த வீடியோவில் ஒரு ஏழைப் பெண்ணுடன் பணக்கார வீட்டு நாய் ஒன்று விளையாடும் காட்சியை காண முடிகின்றது. இது மனதை அள்ளும் வகையில் உள்ளது. 

வீடியோவின் தொடக்கத்தில் ஒரு ஏழை சிறுமி ஒரு பெரிய வீட்டின் முன்னால் நின்றுகொண்டிருப்பதை காண முடிகின்றது. அந்த வீட்டிற்குள் வளர்ப்பு நாய் ஒன்று உள்ளது. தோற்றத்தை வைத்து அந்த சிறுமி மிக ஏழ்மையான நிலையில் இருப்பதை கணிக்க முடிகின்றது. அவரது கால்களில் அவர் செருப்பு கூட அணியவில்லை. முதலில் சிறுமி நாயை நோக்கி ஒரு பந்தை வீசுகிறார். நாய் அதை சரியாக பிடிக்கிறது. சிறுமி மீண்டும் பந்தை வீச நாயும் ஒவ்வொரு முறையும் பந்தை அழகாக பிடிக்கிறது. இப்படி இருவரும் பல முறை பந்தை பிடித்து விளையாடுகிறார்கள். 

மேலும் படிக்க | கீரி பாம்பு சண்டை..கடுப்பில் குழந்தை தொட்டிலில் ஏறிய பாம்பு: வீடியோ வைரல்

ஒவ்வொரு முறை நாய் பந்தை பிடிக்கும்போதும் சிறுமி மிக மகிழ்ச்சியாக நடனமாடத் தொடங்குகிறார். இருவருக்கும் இந்த விளையாட்டு மிக பிடித்து விட்டது என்பதை வீடியோவை பார்த்தால் புரிந்துகொள்ள முடிகின்றது. அதுவும் சிறுமியின் முகத்தில் பூரிப்பும் மகிழ்ச்சியும் அப்பட்டமாக காணப்படுகின்றன. சிறுமி ஏழ்மையான நிலையில் இருந்தாலும் வாழ்க்கையின் சிறு சிறு சந்தோஷங்களால் தன்னை மகிழ்வித்துக்கொண்டு சிரித்த முகத்துடன் வாழ்வது நம் அனைவருக்கும் ஒரு பாடமாகவே உள்ளது. 

வினோதமான அந்த நட்பிம் வீடியோவை இங்கே காணலாம்:

 

வீடியோ வைரல் ஆனது:

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் theboxertuffy என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News