இன்றைய வைரல் வீடியோ: காடுகளில் இருக்கும் விலங்குகளின் விதியும், மனிதர்களின் வாழ்க்கை விதிகயும் மிகவும் வேறுபட்டவை. இங்கு சக்தி வாய்ந்த விலங்குகள் மற்ற விலங்குகளை ஆளுகிறது, வேட்டையாடுகிறது. அதனால்தான் சிங்கம் காட்டின் ராஜாவாக கருதப்ப்படுகிறது. ஏனெனில் சிங்கம் அனைத்து விலங்கையும் தனது இரையாக மாற்றிக்கொள்ளும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. ஆனால் பல நேரங்களில் சிங்கத்திற்கு தனது இரை கிடைக்காமல் பல நாட்கள் பசியுடன் போராடுவதை நாம் பல வீடியோக்களில் நாம் கண்டுள்ளோம். அதுமட்டுமின்றி, பசியால் தனது சொந்த கூட்டாளிகளை தாக்கி சாப்பிடுவதையும் நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தற்போது வைரலாகி வரும் வீடியோ முற்றிலும் மாறுப்பட்டது. இந்த வீடியோவை பார்த்தால் நீங்கள் ஒரு கணம் அதிர்ச்சியாடந்துவிடுவீர்கள். ஏனெனில் இந்த காணொளியில் பசியால் வாடும் சிங்கத்தை நாம் காணலாம்.
தன் குழந்தையை தாடையில் அழுத்தி சுமந்து சென்ற சிங்கம்
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று தனது தாடையை அழுத்தி தன் குழந்தையை சுமந்து செல்வதை வீடியோவில் காணலாம். இங்கு சிங்கம் மிகவும் பலவீனமாக உள்ளது. அந்த சிங்கத்தைப் பார்த்தால் பல நாட்களாக உணவு கிடைக்காதது போல் உள்ளது. அதனால்தான் அந்த பெண் சிங்கம் பலவீனமாக இருப்பது போல் தெரிகிறது. மறுபுறம் சிங்கத்தின் தாடையில் இருக்கும் அந்த சிங்கக் குட்டியும் பலவீனமாக காணப்படுகிறது, இதனுடன் அதன் உடலிலும் எந்த அசைவும் இல்லை. இதனால் குழந்தையும் பசியால் வாடி இறந்ததாக தெரிகிறது. ஆனால் சிங்கம் குழந்தையை தாடையில் அழுத்தி சுமந்து செல்கிறது. சிறிது தூரம் சென்றதும் குழந்தையை தரையில் வைத்து நக்க ஆரம்பிக்கிறது, இருப்பினும் எந்த அசைவும் இல்லை.
தன் குழந்தையை தானே பசியில் சாப்பிடும் சிங்கத்தின் வீடியோவை இங்கே காணுங்கள்:
في واقعة غريبة وفريدة من نوعها كانت تحمل هذه اللبؤة شبلها.
وبدون مقدمات جلست تلتهمه
pic.twitter.com/SalpEMrZy2— عالم الحيوان (@animals5s) June 18, 2023
சிங்கம் தன் குழந்தையையே சாப்பிட ஆரம்பித்தது
இப்போது தன் குழந்தை எழுந்திருக்காது என்று சிங்கம் உணர்ந்ததும், அந்த பெண் சிங்கம் வெறுவழியில்லாமல் அதை சாப்பிடத் தொடங்குகிறது. சிங்கம் குழந்தையின் தலையை தன் தாடையில் அழுத்தி மெதுவாக சாப்பிடத் தொடங்குகிறது, இதன் போது அவள் மிகவும் சோகமாகத் தோன்றுவிதை நாம் காணலாம் மற்றும் அமைதியாக தரையில் அமர்ந்திருப்பதையும் காணலாம்.
மனதை பதற வைக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். சிலர் வனவிலங்குகள் தொடர்பான இந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ