வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும்.  பாம்பை பார்த்தால் அனைவரும் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடவே எண்ணுவார்கள். அதுவும் மலைப்பாம்பு என்றால் கேட்கவே வேண்டாம். மலைப்பாம்பு தன் இரையை இரக்கமின்றி கொல்லும் கொடிய குணம் படைத்தது. மிகப்பெரிய விலங்கைக் கூட விழுங்கும் ஆற்றல் கொண்டது. 


தற்போது மலைப்பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அந்த மலைப்பாம்பு ஒரு மானை முதலில் சுற்றிக்கொள்கிறது, பின்னர் மெதுவாக அதை தனக்கு இரையாக்குகிறது. இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக உள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான உடனேயே இந்த வீடியோ வைரல் ஆகி விட்டது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் பலவித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். 


மானை தாக்கிய மலைப்பாம்பு


காட்டு விலங்குகள் தொடர்பான இந்தக் வீடியோவில், மானைப் பார்த்தவுடன் மலைப்பாம்பு அதை தாக்குவதைக் காண முடிகின்றது. தன்னுடைய விசாலமான உடல் கொண்டு, அது மெதுவாக மானை முழுவதுமாக சுற்றிக்கொள்கிறது. மானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மலைப்பாம்பின் பிடியிலிருந்து எப்படி வெளியேறுவது என அதற்குத் தெரியவில்லை.


வீடியோவில் மானை காணும்போது, அது சிறிது சிறிதாக சாவின் விளிம்பில் செல்வதை காண முடிகின்றது. 


மேலும் படிக்க | காட்டில் ஒரு ‘கணவன் - மனைவி’ சண்டை; பெண் சிங்கத்தை உக்கிரமாக தாக்கும் ஆண் சிங்கம்!


மனதை பதபதைக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்: 



காட்டில் காணப்படும் கொடூரம் 


Wild_animal_shorts_ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. ஆபத்தான மலைப்பாம்பு ஒன்று மானை தனக்கு இரையாக்கும் காட்சி காண்பவர்களை கலவரப்படுத்துகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பயனர் ஒருவர், ‘இதை காணவே முடியவில்லை. மிக மோசமாக உள்ளது’ என எழுதியுள்ளார். மற்றொருவர், ‘என்னால் அந்த மானை காப்பாற்ற முடிந்தால் நன்றாக இருக்கும்’ என எழுதியுள்ளார்.


இந்த வீடியோவுக்கு இதுவரை பல ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. 


மேலும் படிக்க | சீறும் பாம்புடன் விளையாடும் சிறுமி: வைரலாகும் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR