சீறும் பாம்புடன் விளையாடும் சிறுமி: வைரலாகும் வீடியோ

Viral Video: சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 8, 2022, 02:01 PM IST
  • பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும்.
  • ஒரு சிறுமி பாம்புடன் விளையாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
  • இந்த வீடியோ பல லைக்குகளை பெற்றுள்ளது.
சீறும் பாம்புடன் விளையாடும் சிறுமி: வைரலாகும் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும்.  பாம்பை பார்த்தால் அனைவரும் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடவே எண்ணுவார்கள். மிகச் சிலருக்கே, பாம்புக்கு அருகில் இருப்பதற்கும், அதை பிடித்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் தைரியம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு துணிச்சலான ஒரு சிறுமியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. 

இதில் ஒரு சிறுமி, மிகவும் அபாயகரமாகத் தெரியும் பாம்புடன் விளையாடுவதைக் காண முடிகின்றது. அந்த சிறுமி மிகுந்த துணிச்சலுடன் பாம்பை பிடிப்பதையும் காண முடிகின்றது. 

இந்த வீடியோவைப் பார்க்க அச்சூறுத்தும் வகையில் உள்ளது. எனினும், அந்த பெண்ணுக்கு எந்த வித அச்சமும் இருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாக இந்த வீடியோவில் காணப்படுவது போன்ற காட்சியை காண்பது மிக அரிது. காணக்கிடைக்காத இந்த வீடியோ அதிகமாக வைரல் ஆகி வருகின்றது. 

மேலும் படிக்க | கவுண்டமணி பாணியில் எட்டி உதைத்த குரங்கு! வைரலாகும் வீடியோ! 

ஆபத்தான பாம்பை அசல்டாய் பிடித்திருக்கும் சிறுமி

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், வீட்டில் ஒரு பெண் விளையாடிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. அப்போது ஒரு ​​நீண்ட பாம்பு தரையில் ஊர்ந்து செல்கிறது. கருப்பு நிறத்தில் உள்ள அந்த பாம்பைக் காண மிகவும் ஆபத்தாக உள்ளது. 

பாம்பு சிறுமியின் அருகில் வந்தவுடன், அந்த சிறுமி அதை சீண்டத்துவங்குகிறார். பின்னர் பாம்பை பிடிக்க முயற்சியும் செய்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான உடனேயே வைரலாகி விட்டது. 

துணிச்சலான அந்த சிறுமி பாம்புடன் செய்யும் சில்மிஷங்களின் வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ariana (@snakemasterexotics)

பாம்புகளுடன் இப்படி நடந்துகொள்வது ஆபத்தாக முடியலாம்

இந்த வீடியோ snakemasterexotics என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பல வித கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். பலருக்கு இந்த பாம்பை பார்த்தால் நம்பும் வகையில் இல்லை. இது உண்மையான பாம்புதானா என பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். 

இந்த வீடியோவுக்கு இதுவரை லட்சக்கணக்கான வியூஸ்கள் கிடைத்துள்ளன. இதற்கு ஆயிரக்கணக்கான லைக்குகளும் கிடைத்துள்ளன. 

மேலும் படிக்க | மணமகளின் வேற லெவல் குத்தாட்டம்: வாயடைத்து போன மணமகன், வைரலான வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News