இணையதளத்தில் தற்போது அதிர்ச்சி தரும் வீடியோ பரவி வருகிறது. மேற்கு வங்காளத்தில் உள்ள காரக்பூர் ரயில் நிலையத்தில், நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் மீது  உயர் மின் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில்  மின்சாரம் தாக்கி அவர் தலைக்குப்புற விழுந்த காட்சி மனதை பதற வைக்கும். ரயில் டிக்கெட் பரிசோதனை (TTE) அதிகாரி, ஒரு நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது, உயர் மின்னழுத்த கம்பி ஒன்று அவரது தலையில் அறுந்தது.   அதிர்ச்சியூட்டும் காட்சிகளில் அவர் தண்டவாளத்தில் தலைகுப்புற விழுவதைக் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுஜன் சிங் சர்தார் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் மீட்டனர். கேமராவில் பதிவான இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அனந்த் ரூபனகுடி எனற ரயில்வே அதிகாரி ட்விட்டரில் இது குறித்து பதிவிடுகையில், “இது ஒரு வினோதமான விபத்து - ஒரு நீண்ட தளர்வான கேபிள், எப்படியோ ஒரு பறவையால் OHE வயருடன் தொடர்பு வந்துள்ளது, மறுமுனை கீழே விழுந்ததில், TTE இன் தலையைத் தொட்டது. அவர் தீக்காயங்களுக்கு ஆளானார், ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது சிகிச்சையில் உள்ளார்.


மேலும் படிக்க | ஏலகிரி மலையில் விரைவில் சாகச சுற்றுலா தளம்!




காரக்பூர் டிஆர்எம் முகமது சுஜாத் ஹஷ்மி, இந்தியா டுடேயிடம் பேசுகையில், “எங்களுக்கு சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் சில அலங்கார கம்பிகள் TTE மீது  விழுந்திருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, அதிகாரி நலமாக இருக்கிறார், நாங்கள் அவரிடம் பேசினோம் எனக் கூறினார். 


மேலும் படிக்க | மகளின் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு தந்தை செய்த சம்பவம்.. அதிர்ச்சி தந்த ஆச்சரியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ