வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின்  வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காடுகளில் இருக்கும் மிருகங்களில் பாம்புகள் மிக அபாயகரமானவையாக கருதப்படுகின்றன. எனினும், கால்கள், பாதங்கள் அல்லது கொம்புகள் இல்லாமல், காட்டில் சுற்றித் திரியும் பாம்புகள் வேட்டையாடும் பிற விலங்குகளுக்கு எளிதான உணவாக அமைந்துவிடுகின்றன. அப்படி இருக்கையிலும், இவற்றை கண்டுதான் பிற விலங்குகள் அஞ்சுகின்றன. பாம்புகளின் பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. 


பாம்புகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, தங்களை மறைத்துக்கொள்ள பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. ஹக்னோஸ் பாம்பினால் பயன்படுத்தப்பட்ட அத்தகைய ஒரு நுட்பம் இணையத்தில் வைரலாகி, மக்களை வியக்க வைத்தது. 


மேலும் படிக்க | பாலித்தீன் கவரில் மீன் சமைக்கும் மூதாட்டி... டேய் எப்புட்றா - வைரல் வீடியோ


வைரலான வீடியோவில், ஒரு ஹக்னோஸ் பாம்பை ஒரு நபர் தீண்டுகிறார். ஆனால், அந்த நபரால் தனக்கு ஆபத்து வருமோ என்ற பதட்டத்தில், அந்த பாம்பு தான் இறந்துவிட்டது போல நடிக்கிறது. அந்த நபர் தொட்டவுடனேயே பாம்பு அதன் உடலை இறுக்கிக்கொண்டு, லேசான சத்தத்தை எழுப்பி இறந்துவிட்டது போல நடிக்கிறது. 


இந்த வீடியோவை @sciencegirl என்ற பெயரில் ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார், “ஹாக்னோஸ் பாம்பு வேட்டையாடுவதைத் தவிர்க்க மரண நாடகம் நிகழ்த்துகிறது. இந்த நடத்தை தனடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது." என்று இந்த வீடியோவில் தலைப்பிடப்பட்டுள்லது. 


பாம்பின் பக்கா நடிப்பு வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோ பகிரப்பட்டது முதல் 3 மில்லியனுக்கு அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகளும் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


சுவாரஸ்யமாக, ஹாக்னோஸ் பாம்புகள் ஊர்வன ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள பாம்பு வகைகளாகும். ஏனெனில் அவை விஷமற்றவை. மேலும் இவை மனிதர்களுக்கு பாதிப்பில்லாதவையாக கருதப்படுகின்றன.


மேலும் படிக்க | தண்ணீருக்குள் டூயட் போடும் வாத்துகள்: ரசிக்க வைக்கும் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ