Watch Viral Video: இந்த பாம்பின் வானவில் வண்ணங்கள் உங்களை வசீகரிப்பது நிச்சயம்!!
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்!! ஆம், மனிதனை அச்சத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வல்லமை பாம்புகளுக்கு உள்ளது. ஆனால், இங்கு ஒரு பாம்பு, இணையத்தை தன் அழகால் கலக்கிக்கொண்டு இருக்கின்றது.
Viral News: பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்!! ஆம், மனிதனை அச்சத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வல்லமை பாம்புகளுக்கு உள்ளது. ஆனால், இங்கு ஒரு பாம்பு, இணையத்தை தன் அழகால் கலக்கிக்கொண்டு இருக்கின்றது.
இந்த பாம்பின் (Snake) அழகால், பாம்புகளை பிடிக்காதவர்கள் கூட பாம்புகளை விரும்பத் தொடங்கி விட்டார்கள், அவர்களையும் இந்த பாம்பு வசீகரித்து விட்டது.
இந்த வானவில் பாம்பின் வீடியோவைப் பார்த்து கண்டிப்பாக நீங்களும் அதன் அழகால் மயங்கிப் போவீர்கள். இதன் வண்ணங்கள் கண்டிப்பாக உங்களையும் வசீகரிக்கும். இந்த பாம்பு 'மை லவ்' (MyLove) என பெயரிடப்பட்டுள்ளது. ரெப்டைல் ஸூ (Reptile Zoo) என்ற ஒரு இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கம் அந்த வீடியோவைப் பகிர்ந்து "மைலவ்வின் அழகு எப்போதும் சலிப்பதில்லை" என்று தலைப்பிட்டது.
வைரல் வீடியோவில் (Viral Video) ஒரு பெண், அநேகமாக ஒரு மிருகக்காட்சிசாலையின் ஊழியர், இந்த பெரிய பாம்பை கழுத்தில் தொங்கவிட்டு, மகிழ்ச்சியுடன் கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார். பிறகு, அந்த பெண், பாம்பின் அழகான பல வண்ண செதில்களை காண்பிக்கிறார்.
ALSO READ: Watch Video: பாம்பை அசால்டாக பிடித்து அதிரடி காட்டிய பெண்ணின் வீடியோ வைரல்
முதலில், பாம்பு நீல நிறமாகத் தோன்றுகிறது. ஆனால் நீங்கள் அருகில் சென்று பர்த்தால், அந்த பாம்பின் தோலில் பல வண்ணங்கள் பிரதிபலிப்பதை நீங்கள் காண முடியும்.
பாம்பின் செதில்களில் ஒளிக் கதிர்கள் பட்டு துள்ளும்போது, வண்ணங்கள் இன்னும் பிரகாசமாக ஜொலிக்கின்றன.
ஊர்வனங்களின் பிரியர்களுக்கான மற்றொரு விருந்தாக, தி ரெப்டைல் ஸூ என்ற பக்கம், பாம்பின் ஒரு மிக அருமையான புகைப்படத்தையும் பகிர்ந்து, "இந்த மிருகக்காட்சி சாலையின் மிகவும் அழகான பாம்பிற்கான ஒரு சிறிய பாராட்டு இடுகை இதோ!! அந்த பாம்பு அழகாக இருப்பதோடு, அது மனதை மயக்கும் வகைகளிலும் இருப்பதால், அதற்கு 'MyLove' என நாங்கள் பெயரிடப்பட்டுள்ளோம்" என்று எழுதியுள்ளது.
ஃபாரன்சியா எரிட்ரோகிராம்மா (Farancia erytrogramma) என அழைக்கப்படும் ரெயின்போ பாம்புகள், பெரிய, அசாதாரணமான, அதிக நீர்வாழ், கொலூப்ரிட் பாம்பின் ஒரு இனமாகும். இது தென்கிழக்கு அமெரிக்காவின் கடலோர சமவெளிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR