Watch Video: பாம்பை அசால்டாக பிடித்து அதிரடி காட்டிய பெண்ணின் வீடியோ வைரல்

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால், இந்த பெண் நடுங்க மாட்டார். மாறாக பாம்பை, பார்ப்பவர்கள் அனைவரையும் நடுங்க வைப்பார். ஆம், அசால்டாக பாம்பை தன் கையால் பிடிக்கும் ஒரு பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 3, 2021, 03:46 PM IST
  • பாம்பை அசால்டாக கையால் பிடித்த பெண்ணின் வீடியோ வைரல்.
  • அந்த பக்கம் சென்ற சிலர் வீடியோ எடுத்தனர்.
  • பெண்ணின் சாகசத்தை பாராட்டும் நெட்டிசன்கள்.
Watch Video: பாம்பை அசால்டாக பிடித்து அதிரடி காட்டிய பெண்ணின் வீடியோ வைரல் title=

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால், இந்த பெண் நடுங்க மாட்டார். மாறாக பாம்பை, பார்ப்பவர்கள் அனைவரையும் நடுங்க வைப்பார். ஆம், அசால்டாக பாம்பை தன் கையால் பிடிக்கும் ஒரு பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

இந்த சம்பவம் மே 21, 2021 அன்று நிகழ்ந்தது. வீடியோவில், ஒரு பெரிய பாம்பு சுறுசுறுப்பாக, ஒரு பெண்ணுடன் சண்டையிட முயற்சிப்பதை காண முடிகிறது. எனினும், இறுதியில் அந்த பெண் அந்த பாம்பை (Snake) அடக்கிவிடுகிறார். அந்த வழியாக சென்ற ஒருவர் இதைக் கண்டு புகைப்படம் எடுத்துள்ளார். சாலையோரத்தில் அந்த பெண் பாம்பைப் பிடித்தபடி நிற்பதைப் பார்த்தவுடன் அவர் இந்த நிகழ்வை தன் காமிராவில் பதிவு செய்தார். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் பெண்ணின் துணிச்சலைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். 

வீடியோவில் (Viral Video), பெண்ணின் முகத்தை சரியாக காண முடியவுல்லை. அவர் முகக்கவசமும் ஹெல்மெட்டும் அணிந்திருப்பதால் பாம்பைப் பிடிக்கும் பெண்ணின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. எந்தவொரு பாதுகாப்புமின்றி அந்த பெண் பாம்பைப் பிடிப்பதைக் காண முடிகிறது. வீடியோவின் இறுதியில், அந்த பெண் பாம்பை பிடித்தபடியே நடந்து செல்வதை பார்க்க முடிகிறது. பாம்பு அவர் உடலைச் சுற்றிக் கொண்டிருப்பதும் தெரிகிறது. 

ALSO READ: பாம்பைப் பிடித்து லுங்கிக்குள் போட்ட நபர்; வீடியோவைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

" நாங்கள் அந்த வழியாக சென்றபோது இந்த பெண் ஒரு பெரிய பாம்பைப் பிடிக்க முயற்சிப்பதைக் கண்டோம். இந்த தருணத்தை பதிவு செய்ய அங்கேயே நின்று விட்டோம். ஆனால் அந்த செயல் ஆபத்தானதாக இருந்தது" என்று வீடியொ எடுத்தவர் கூறியதாக, வீடியோ உரிமைதாரர் வைரல்ஹாக் கூறினார்.

வீடியோவை இங்கே காணலாம்:

யூடியூப் (YouTube) வீடியோவின் கருத்துகள் பிரிவில், நெட்டிசன்கள் இதுபோன்ற ஒரு முயற்சியை தாங்கள் செய்திருக்க மாட்டோம் என ஒப்புக்கொண்டதுடன் அந்த பெண்ணின் துணிச்சலையும் பாராட்டியுள்ளார்கள்.  “எனக்கும் பாம்புகள் என்றால் பிடிக்கும், இப்படி செய்ய ஆசையாக இருக்கிறது. ஆனால், இதற்கான துணிச்சல் எனக்கு இல்லை (sic)” என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். 

"என்னாலும் இப்படி செய்ய முடியாது" என மற்றொருவர் அதை ஒத்திசைத்து கருத்து தெரிவித்துள்ளார்.

ALSO READ: Watch: Live Show-வில் ஊழியரைத் தாக்கிய பாம்பு, வீடியோ வைரல், அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

Trending News