பந்தாவா பைக் ஓட்டி பக்காவா மாஸ் காட்டிய மணப்பெண்
இந்த வீடியோவில், மணமகள் சிவப்பு நிற லெஹங்கா மற்றும் நகைகளை அணிந்து சாலையில் புல்லட் ஓட்டிக்கொண்டு வருவதைக் காண முடிகின்றது.
Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
பொதுவாக தன்னுடைய திருமணத்தில் தன்னுடைய வருகை ஒரு பிரம்மாண்டமான முறையில் இருக்க வேண்டும் என திருமணம் புரிந்துகொள்ளும் மணமகள் நினைப்பது வழக்கம். வெட்கப்பட்டு, குனிந்த தலையுடன் தான் மணமகள் வர வேண்டும் என்ற சிந்தனை பழங்கால சிந்தனையாகி விட்டது.
தற்போது மணம் புரியும் பெண்கள், வழக்கமான பாணியை புறக்கணித்து புதுப்புது விதங்களில் திருமண மண்டபத்துக்கு வரத்தொடங்கியுள்ளார்கள்.
மிகவும் மகிழ்ச்சியாக திருமண மண்டபத்துக்கு பைக்கை ஓட்டிக்கொண்டு வரும் ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி (Viral Video) வருகின்றது.
ALSO READ | அடிச்சிட்டான்யா அடிச்சிட்டான்!! ஆட வந்த பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி: வீடியோ வைரல்
இந்த வீடியோவில், மணமகள் சிவப்பு நிற லெஹங்கா மற்றும் நகைகளை அணிந்து சாலையில் புல்லட் ஓட்டிக்கொண்டு வருவதைக் காண முடிகின்றது. படு கூலாக தன் திருமணத்துக்கு வரும் பெண்ணின் அணுகுமுறை இணையவாசிகளை கவர்ந்துள்ளது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் witty_wedding என்ற பெயரில் பகிரப்பட்டது. இதன் தலைப்பில், “உங்கள் காதல் திருமணத்திற்கு உங்கள் குடும்பத்தினர் சம்மதித்து விட்டால், இப்படிதான் இருக்குமோ?? திருமணத்துக்கு தயாராகும் உங்கள் நண்பர்களையும் டேக் செய்யுங்கள்" என எழுதப்பட்டுள்ளது.
கூல் மணமகளின் கலக்கல் வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. மணமகளின் (Bride Video) தன்னம்பிக்கையும் அசத்தலான தைரியமும் மக்களை கவர்ந்துள்ளது. இருப்பினும், சிலர் மணமகளின் பாதுகாப்பு குறித்து கவலையும் தெரிவித்துள்ளனர். சிலரோ, அவர் குறைந்தபட்சம் ஹெல்மெட்டையாவது அணிந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
ALSO READ | Viral Video: கூலாக கார் ஓட்டி மண்டபத்துக்கு வந்த மணமகள், குவியும் பாராட்டு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR