எலோன் மஸ்க்கின் டீனேஜ் காதலிக்கு அடித்தது ஜாக்பாட்! எலன் மஸ்க், தன்னுடன் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாக படித்த ஜெனிஃபர் க்வின் என்ற சக மாணவியை காதலித்தார். மஸ்குடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அவரிடமிருந்து பெற்ற பரிசுகள் என பல காதல் நினைவுகள் ஜெனிஃபரிடம் இருந்தன. தற்போது அந்த காதல் பரிசுகளையும் புகைப்படங்களையும் விற்று மஸ்கின் முன்னாள் காதலி கோடிக்கணக்கான பணத்தை பெற்றார். அதையடுத்து, எலோன் மஸ்க், தனது ட்விட்டர் சுயவிவரப் படத்தை ஏலத்தில் விற்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றை வைத்துள்ளார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, ஜெனிஃபருடன் டேட்டிங் செய்தார் எலோன் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலோன் மஸ்க்கின் பென்சில்வேனியா பல்கலைக்கழக சக மாணவியும், முன்னாள் காதலியுமான ஜெனிஃபர் க்வின், தற்போது மஸ்க்கின் 18 புகைப்படங்கள் மற்றும் மஸ்க் கொடுத்த சில பரிசுகளையும் ஏலத்தில் விற்றார்.



தற்போது ஏலத்தில் விற்ற காதல் பரிசுகளில் ஒரு சிறிய மரகதக் கல்லுடன் கூடிய தங்க நெக்லஸ் மற்றும் கையொப்பமிடப்பட்ட அட்டை ஆகியவையும் அடங்கும். இந்த செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.


மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது


உலக அளவில் பிரபலமான எலோன் மஸ்க்கின் வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அதிகம் விவாதிக்கப்படுகிறது. இவையும் அவரின் பிரபலத்திற்கு காரணம் ஆகும். அவரது முன்னாள் காதலி ஒருவர் அவரது இந்த பிரபலத்தை பணமாக்கிக் கொண்டார். எலன் மஸ்க் என்றாலே அதிரடி காதல் மன்னன் என்ற பெயரை இதுபோன்ற சம்பவங்கள் உண்மையாக்குகின்றன.


டெஸ்லா நிறுவன சிஇஓவின் கேண்டிட் ஷாட்களையும் வேறு சில பொருட்களையும் அதிகப் பணத்திற்கு விற்றார் என்று செய்திகள் வெளியானதும் அவை வைரலாகின.


மேலும் படிக்க | சிறுமியை போலவே நடனமாடி காட்டிய யானை! க்யூட் வீடியோ வைரல்!


ஏலத்தில் விற்கப்பட்ட பரிசுகளில் சிறிய மரகதக் கல்லுடன் கூடிய தங்க நெக்லஸ்  ரூ. 40 லட்சத்திற்கு ($51,000) விற்கப்பட்டது என நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. எலோன் மஸ்கின் கையெழுத்து இடப்பட்ட வாழ்த்து அட்டை, ரூ. 14 லட்சத்துக்கு ($17,000) விற்கப்பட்டது.


விற்கப்பட்ட எலோன் மஸ்கின் 18 படங்களில் ஒன்றில் மஸ்க் தனியாக இருக்கிறார். இந்தப் படத்தை தற்போது தனது டிவிட்டர் ப்ரொஃபைல் படமாக மஸ்க் மாற்றிவிட்டார். அதேபோல, ஏலத்தில் விற்கப்பட்ட படங்களில் எலன் மஸ்க் ஜெனிபருடன் இருக்கும் புகைப்படங்களும் உள்ளன. பிரபலத்தின் முன்னாள் காதலியாக இருந்தால், காதல் பரிசுகளின் மவுசும் கூடி விடும் என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ