ஒரு குடையின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் என்பது அதிர்ச்சியான செய்தி என்றால், அது மழையில் இருந்து பாதுகாக்காது என்றால் பேரதிர்ச்சியாக இருக்கிறதா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவின் பெய்ஜிங்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படும் 'குசி - அடிடாஸ் பிராண்டு' குடையில் மழை நீர் ஒழுகுவதாக வெளியான செய்தியை, 14 கோடிக்கும் அதிகமானவர்கள் படித்துள்ளனர்.


இத்தாலியைச் சேர்ந்த குசி நிறுவனம், விலையுயர்ந்த கைப்பைகள், ஆயத்த ஆடைகள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றை விற்பனை செய்கிறது.அதுபோல ஜெர்மனியைச் சேர்ந்த அடிடாஸ் நிறுவனம், விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், உடைகள் விற்பனையில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.


மேலும் படிக்க | சிற்றின்பங்கள் எல்லாம் இன்பமயம்: ஆனால் 50 பேருக்கு மட்டுமே அனுமதி


உலகப் பிரபல நிறுவனங்களான குசி மற்றும் அடிடாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் குடை, சீனாவில் 1.23 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது வைரல் செய்தியாய் பரவுகிறது.


இந்த சிறப்புக் குடையை வாங்கிய ஒருவர், 'குடைக்குள் மழை நீர் ஒழுகுகிறது' என, 'வெய்போ' சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதை, 14 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டதை அடுத்து, உலகளவில் பரபரப்பான குடையாகியது இந்த ‘குடைக்குள் மழை’.


 



இந்த வைரலான செய்திக்கு இதுவரை அடிடாஸ் நிறுவனமோ அல்லது குசி நிறுவனமோ இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. சீனா, உள்ளூர் நிறுவன தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியுள்ளது. இதனால், அன்னிய நிறுவனங்களின் தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க துவங்கியுள்ளனர்.


மேலும் படிக்க | கடலில் கலர்ஃபுல்லாக நீந்தி விளையாடும் பாம்பு: இது பாம்பா இல்லை பழுதா


மழையை தடுக்காவிட்டால் இந்த குடை என்ன செய்கிறது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். மழைநீரை புகாவிடாத குடையின் மதிப்பு ரூ.1.3 லட்சம் என்பதும், இவ்வளவு பணம் கொடுத்து வாங்கியவர்களின் கண்ணில் இருந்து மழையாய் கண்ணீர் கொட்டும் என்பதும் பலரும் பதிவிட்டு வரும் கருத்துக்களின் சாராம்சமாக இருந்துவருகிறது. 


பல பயனர்கள் குஸ்ஸி மற்றும் அடிடாஸ் அதிக விலையுள்ள குடைகளை விற்பதற்காக கேலி செய்தனர். "அப்படியானால், அது என்ன செய்கிறது?" இன்ஸ்டாகிராமில் ஒரு பயனர் கேட்டார்.


வெறும் ஃபேஷன் சின்னமாக மாறிய இந்த குடையை ஆடம்பர லேபிள் குஸ்ஸி சீனாவில் 11,100 யுவான் ($1,644)க்கு விற்பனை செய்கிறது. ஆனால், இந்தக் குடை நீர்ப்புகா குடையல்ல என்றும் வெயிலில் இருந்து தடுப்பதற்கானது என்றும் பிராண்ட்கள் தெளிவுபடுத்தியுள்ளன. இது ஒரு பயன்பாட்டை விட ஒரு ஃபேஷன் சின்னம் என்பது விவாதப் பொருளாகிவிட்டது.


மேலும் படிக்க | பசுவின் கன்றுக்கு பால் கொடுக்கும் நாய்; மனம் நெகிழ வைக்கும் வீடியோ


"11,100 யுவான்களுக்கு விற்கப்படும் குடை நீர்ப்புகாதது இல்லை" என்ற ஹேஷ்டேக் கொண்ட வீடியோ சீன சமூக ஊடக தளம் வெய்போவில் 140 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.


இந்தக் குடையின் பயன்பாடு, மழையைத் தடுக்காது, ஆனால் சூரிய ஒளியில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் நிழல்குடையாகவும், ஃபேஷனுக்காகவும் பயன்படுத்தப்படலாம் என்பது கொஞ்சம் ஓவர் தான் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.  


சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் "பொது செழிப்பு" பிரச்சாரம் சமத்துவத்தை மையமாகக் கொண்டது. சீனாவில் பிரீமியம் பிராண்டுகளின் நிலையே ஆட்டம் கண்டுவிட்டன. 
அதோடு, சீனாவில் அதிகரித்துவரும் மேற்கத்திய ஆடை பிராண்டுகளும் அங்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவருகின்றன. 


மேலும் படிக்க | கம்பீரமாக நடக்கும் யானையை வியந்து பார்க்கும் மக்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR