தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் காலமாக இருந்தாலும், ஒரு பாட்டில் தண்ணீரின் விலை, பொதுவாக நாம் வாங்கக் கூடியதாகவே இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு பாட்டில் தண்ணீரின் விலை 10 ரூபாயாக இருக்கலாம். ஆனால், ஒரு பாட்டில் குடிநீரின் அதிகபட்ச விலை என்ன தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

44 லட்சம் ரூபாய்! இது ஒரு ஆடம்பர காரின் விலையோ அல்லது வீட்டின் விலையோ  இல்லை. ஒரு பாட்டில் தண்ணீரின் விலை (Benefits of Water) லட்சக்கணக்கில் என்பதால், இது மதுப்பிரியர்களின் விருப்பமான தண்ணீ என்று நினைக்க வேண்டாம். இது மனிதர்கள் குடிக்கும் குடிநீர் பாட்டிலின் விலை தான்.



 அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிபுடோ எ மோடிக்லியானி என்ற பிராண்ட் இந்த குடிநீரை தயாரித்து விற்கிறது. 44 லட்ச ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் குடிநீர் (Bottle of Drinking Water) வாங்குபவர்கள் கண்டிப்பாக கோடீஸ்வரர்களாகத் தானே இருப்பார்கள்!


அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிபுடோ ஏ மோடிக்லியானி நிறுவனத்தின்(Acqua di Cristallo Tributo)வாட்டர் பாட்டில் 2010ஆம் ஆண்டில்  ரூ.44 லட்சத்துக்கு விற்பனையாகி, உலகின் மிகவும் விலையுயர்ந்த தண்ணீர் பாட்டில் என்று கின்னஸ் புத்தகத்தில் சாதனைப் பதிவு செய்துள்ளது. 


உள்ளே இருக்கும் பொருளின் விலையை விட தண்ணீர் பாட்டிலுக்கு (Water Bottle) தான் இவ்வளவு விலையாக இருக்கும் என்பது அதன் பேக்கேஜிங்கைப் பார்த்தாலே தெரிகிறது. 750 மில்லி அளவு மட்டுமே தண்ணீர் கொண்ட இந்த பாட்டில் 24 காரட் தங்கத்தால் ஆனது. ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும் நிறுவனருமான நீதா அம்பானி உட்பட உலகின் பில்லியனர்கள், உலகின் மிக விலையுயர்ந்த தண்ணீரைக் குடிப்பதாகக் கூறப்படுகிறது.


READ ALSO | நெல்லிக்காயை இப்படி பயன்படுத்தினால் எடை குறையும்


இந்த பாட்டிலில் உள்ள நீரில் 23 காரட் தங்கம் தண்ணீரில் கலக்கப்பட்டுள்ளதாம். இந்த தண்ணீரை, தங்கத் தண்ணீர் என்றே சொல்லலாம். அதிலும் 5 கிராம் அளவிலான தங்கம் இந்தத் தண்ணீரில் (Drinking Water)கரைந்துள்ளதாம்!  உலோகமான தங்கம், இந்த சிறப்புத் தண்ணீரின் காரத்தன்மையை அதிகரிக்கிறதாம். 


Moneyinc.com என்ற வணிக வலைத்தளத்தின்படி, அக்வா டி கிறிஸ்டல்லோவின் ஒவ்வொரு பாட்டிலிலும் பூமியில் உள்ள மூன்று இடங்களில் இருந்து கிடைக்கும் தண்ணீர் உள்ளது.பிரான்சில் உள்ள நீரூற்றுகளிலிருந்தும்,  பிஜியில் உள்ள நீரூற்றுகளிலிருந்தும், ஐஸ்லாந்தில் உள்ள பனிப்பாறைகளிலிருந்தும் என மூன்று இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கப்படுகிறது.


Acqua di Cristallo Tributo a Modigliani நீர், சராசரி குடிநீரை விட அதிக ஆற்றலை வழங்குகிறது. ஃபெர்னாண்டோ அல்டமிரானோ (Fernando Altamirano) என்பவர், இந்த தண்ணீர் பாட்டிலை வடிவமைத்துள்ளார். அவர் தான் உலகின் மிக விலையுயர்ந்த மற்றுமொரு பாட்டிலையும் வடிவமைத்துள்ளார். 


READ ALSO | மிளகை இப்படி பயன்படுத்தினால் உடல் எடை கேரண்டியாக குறையும்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR