Bizarre: ஒரு லைட், ஒரு ஃபேனுக்கு லட்சத்தில் வந்து ஷாக் கொடுத்த மின்சார கட்டணம்!!
ஒரு சுவாரசியமான நிகழ்வில், மத்திய பிரதேசத்தின் குணாவில் 65 வயதான ஒரு பெண்ணுக்கு மின்சார கட்டணமாக 2.5 லட்சம் ரூபாயாக வந்துள்ளது.
ஒரு சாதாரண குடும்பத்தில், மின்சார கட்டணம் என்பது மாதாமாதம் செலுத்தப்பட வேண்டிய ஒரு முக்கியமான கட்டணமாகும். மிக அதிக கட்டணம் வந்துவிடப் போகிறதே என்ற காரணத்துக்காக, நாம் மின் உபகரணங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்துவதும் உண்டு.
ஒரு சுவாரசியமான நிகழ்வில், மத்திய பிரதேசத்தின் (Madhya Pradesh) குணாவில் 65 வயதான ஒரு பெண்ணுக்கு மின்சார கட்டணமாக 2.5 லட்சம் ரூபாயாக வந்துள்ளது.
65 வயதான ராம்பாய் பிரஜாபதி வீட்டு வேலைகள் செய்து வருகிறார். அவர் ஒரு குடிசைப்பகுதியில் வசிக்கிறார். ராம்பாய் ஒரு மின் விளக்கு மற்றும் ஒரு டேபிள் விசிறிக்கு மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார். முன்னர் அவருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ .300 முதல் ரூ.500 வரை பில் வந்து கொண்டிருந்தது. இருப்பினும் ஊரடங்கு (Lockdown) காரணமாக, அவரால் இரண்டு மாதமாக பில் கட்ட முடியவில்லை. அதற்குப் பிறகு அவருக்கு வந்த பில்லின் அளவு ரூ .2.50 லட்சம்!!
தனது மின்சார கட்டணத்தைப் (Electricity Bill) பார்த்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே போனார் ராம்பாய். பதட்டத்துடன் பில்லை சரி செய்ய அவர் மின் வாரிய அலுவலகத்தை அடைந்தார். ஆனால் அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. அலுவலக வாசலில் தினமும் ஒரு மரத்தடியில் தான் காத்திருப்பதாகவும், ஆனால், யாரும் தனக்கு செவிசாய்ப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
ALSO READ: AC: மின்சார கட்டணம் ஷாக் அடிக்காமல் இருக்க சில டிப்ஸ்
“மற்றவர்களின் வீடுகளில் வேலை செய்து நான் என் வாழ்க்கையை நடத்தி வருகிறேன். எனது வீட்டில் ஒரு மின் விளக்கு மற்றும் டேபிள் ஃபேனை மட்டும்தான் பயன்படுத்துகிறேன். ஆனால் எனக்கு ரூ .2.5 லட்சம் பில் வந்துள்ளது. நான் கடந்த பல நாட்களாக மின்சாரத் துறை அலுபலகத்துக்கு சென்று வருகிறேன். ஆனால் நான் சொல்வதை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை." என்று ராம்பாய் ஒரு ஊடகத்திடம் கூறினார். மேலும், தான் பல பொது பிரதிநிதிகளையும் குணா கலெக்டரையும் இது குறித்து அணுகியதாகவும், ஆனால் தனது பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றும் கூறினார்.
இதேபோன்ற சம்பவம் பற்றி பிப்ரவரியிலும் தெரிய வந்தது. 80 வயதான ஒரு நபருக்கு கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் மின்சார பில் வந்தது. இந்த பில்லைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கண்பத் நாயக் என்ற அந்த நபர் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்டார். மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனத்தின் (MSEDCL) ஒரு சிறு பிழை காரணமான இந்த தவறு ஏற்பட்டது.
ALSO READ: Electricity Board மின் கணக்கீட்டுக்கு விரைவில் ஸ்மார்ட் மீட்டர் முறை: செந்தில் பாலாஜி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR