Coronaவில் இருந்து பாதுகாக்க யாகம் வளர்க்க வேண்டும் பாஜக அமைச்சரின் யோசனை

கொரோனாவில் இருந்து தப்பிக்க யாகம் செய்வது பலன் தரும் என்று வேண்டும் என யோசனை சொல்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 13, 2021, 11:01 AM IST
  • கொரோனாவில் இருந்து பாதுகாக்க யாகம் வளர்க்க வேண்டும் பாஜக அமைச்சரின் யோசனை
  • சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவதற்கான வழிமுறை இது
  • இது மதவெறியோ, சடங்கோ அல்ல
Coronaவில் இருந்து பாதுகாக்க யாகம் வளர்க்க வேண்டும் பாஜக அமைச்சரின் யோசனை title=

கொரோனாவில் இருந்து தப்பிக்க யாகம் செய்வது பலன் தரும் என்று வேண்டும் என யோசனை சொல்வது ஆன்மீகவாதியோ அல்லது சாமியாரோ அல்ல, ஒரு அமைச்சர் என்பது ஆச்சரியம் ஆனால் உண்மை.  
 
கொரோனாவால் நாடே நிலைகுலைந்து இருக்கும் நிலையில், மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அதேபோல், கொரோனா பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கும் ஆலோசனைகளுக்கும் பஞ்சமில்லை. 

பல்வேறு விசித்திரமான யோசனைகளை கேட்டிருக்கும் மக்களுக்கு இன்னுமொரு ஆச்சரியமான யோசனையை அள்ளித் தெளித்திருக்கிறார் மத்தியபிரதேச மாநில கலாசாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர்.

Also Read | புதுச்சேரி: 3 பாஜக நியமன MLA பதவி ஏற்புக்கு சீமான் கண்டனம்

பா.ஜ.க. ஆளும்கட்சியாக இருக்கும் மாநிலத்தில், அக்கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் அமைச்சர் இப்படி கருத்து சொல்வதில் வியப்பேதும் இல்லை தான். ஆனால், எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

‘அனைவரும் யாகம் வளர்த்து, அதன் நெருப்பில் இரண்டு பொருட்களை போட வேண்டும். சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவதற்கான வழிமுறை இது. பெருந்தொற்றை ஒழிப்பதற்கு நீண்டநெடுங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் புனிதமான செயல்பாடு ஆகும்.

இது மதவெறியோ, சடங்கோ அல்ல. ஒவ்வொருவரும் இவ்வாறு யாகம் வளர்த்தால், கொரோனாவின் மூன்றாவது அலை இந்தியாவை எட்டிக்கூட பார்க்காது என்கிறார் மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் உஷா தாக்கூர்.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெற வேதம் சார்ந்த வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் என்று கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்தார் அமைச்சர் உஷா தாக்கூர். பசு எரு வறட்டியை நெருப்பில் இட்டு எரித்தால் 12 மணி நேரத்துக்கு வீடு தூய்மையாக இருக்கும் என்று மத்தியப் பிரதேச அமைச்சர் உஷா கூறியிருந்தார்.

Also Read | புதுச்சேரி: 3 பாஜக நியமன MLA பதவி ஏற்புக்கு சீமான் கண்டனம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News