சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்பேற்றது. கொரோனா தொற்று பரவல் உச்சியில் இருந்தபோது ஆட்சிக்கு வந்த திமுக அரசு, பல கட்ட ஊரடங்குகள் மற்றும் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
பல துறை அமைச்சர்களும் தங்கள் துறைகளில் பல முன்னேற்றப் பணிகளையும் சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் தனது துறையில் பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வழியில், தமிழகத்தில் (Tamil Nadu) மின் கணக்கீடு செய்யும் முறை டிஜிட்டல் மீட்டரிலிருந்து ஸ்மார்ட் மீட்டர் முறைக்கு மாற்றப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மதுரை, திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்போது அவர் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள ரூ.900 கோடி இழப்பை சரிசெய்வதற்கான ஸ்மார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
ALSO READ: வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்
மேலும், மின்வாரியத்தில் ஏற்படும் இழப்பை சரிசெய்ய ஆய்வு செய்யப்பட்டு, சீர்திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அப்போது கூறினார். மின்வாரிய கணக்கீடு முறையை டிஜிட்டல் மீட்டரிலிருந்து ஸ்மார்ட் மீட்டர் முறைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது.
மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் பயன்படுத்தப்பட்டால், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவருக்கும் இதில் பல நன்மைகள் கிடைக்கும். ஆன்லைனிலேயே மின்சார கணக்கெடுப்பு நடக்கும் என்பதும் எளிமையான முறையில் மின்சார கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர்கள் சாத்தியப்படுமா?
இந்தியாவில் ஏற்கனவே டெல்லி (Delhi), ஹரியானா போன்ற சில மாநிலங்களில் இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. இந்த மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மின்பயன்பாட்டை கணக்கீடு செய்ய, ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்தலாம் என்ற ஆலோசனை வெகுவாக இருந்துவந்த நிலையில், தற்போது இதற்கான கோரிக்கை அதிகரித்துள்ளது. எனினும் தமிழகத்தில் இது சாத்தியமா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதில் கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது?
நம் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் தற்போது உள்ள மீட்டர்களின் மின்வாரிய ஊழியர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வந்து ரீடிங் எடுத்து செல்வது வழக்கமாகும். ஸ்மார்ட் மீட்டர் வீடுகளில் பொருத்தப்பட்டால், அனைத்து ஸ்மார்ட் மீட்டர்களும் சர்வருடன் இணைக்கப்படும்.
ஒவ்வொரு மாத இறுதியிலும், நாம் அந்த மாதத்தில் எவ்வளவு யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தினோம் என்றும் எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் நமக்கு உடனடியாக தெரிந்துவிடும். இந்த விவரம் நமக்கு எஸ்எம்எஸ் அல்லது மின் அஞ்சல் மூலம் வரும்.
இதுமட்டுமல்லாமல், இதில் ப்ரீபெய்டு வசதியும் உள்ளது. நமது மொபைல் போன்களுக்கு நாம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்வதுபோல், இதற்கும் ப்ரீபெய்ட் சார்ஜ் செய்துகொள்ளலாம்.
ஸ்மார்ட் மீட்டர் முறையில் பல நன்மைகள் இருக்கின்றன. பலரது பணிகள் சுலபமகிவிடும். இந்த பல்வேறு காரணங்களுக்காக தமிழக அரசு (TN Government) இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறது.
ALSO READ: ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை; தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR