மழைக்காலங்களில் முதலைக்கு இரையாகிவிடாதீர்கள் மக்கேள! விருதுநகர் காவல்துறை எச்சரிக்கை
மழைக்காலங்களில் தெரியாத நீர் நிலைகளில் இறங்கு முதலைக்கு இரையாகிவிடாதீர்கள் என விருதுநகர் காவல்துறை சோஷியல் மீடியாவில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன், குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது. இதனால் சிரமத்துக்குள்ளாகியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் ஆயிரக்கணக்கான நெல் மற்றும் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகியிருக்கின்றன.
மேலும் படிக்க | சாமி சாமி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சிறுமி: ஷேர் செய்த மந்தனா, வைரலான வீடியோ
இதுஒருபுறம் இருக்க மழையால் நிரம்பி வழியும் நீர் நிலைகளில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக விருதுநகர் காவல்துறை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் முன்னெச்சரிக்கை வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளனர். அதில், மழையால் தண்ணீர் நிரம்பி வழியும் ஆறு ஒன்றில் ஒருவர் ஒரு பொருளை தூக்கிப்போட, அங்கு தண்ணீருக்குள் இருந்த முதலை மேலே வந்து வேட்டையாடுகிறது.
இது வீடியோ பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அதில், மழைக்காலங்களில் உங்களுக்கு அறிமுகமில்லாத, தெரியாத நீர்நிலைகளில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என தெரிவித்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த யாரும் தெரியாத நீர் நிலைகளில் குளிக்க இறங்க மாட்டார்கள். ஏனென்றால், மழையில் வழிந்தோடும் வெள்ளத்தில் முதலை உள்ளிட்டவை எங்கிருந்து வேண்டுமானாலும் அடித்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | காதலியை கரெக்ட் பண்ண நடுரோட்டில் காதலன் செய்த செயல்: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ