சாமி சாமி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சிறுமி: ஷேர் செய்த மந்தனா, வைரலான வீடியோ

Girl Dance Viral Video: ஒரு பள்ளி மாணவி சாமி சாமி பாடலுக்கு ஆடிய நடனம் இணையத்தை கலக்கி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 15, 2022, 02:13 PM IST
  • சாமி சாமி பாட்டுக்கு நடனம் ஆடிய சிறுமி.
  • வியப்பில் ஆழ்ந்த மந்தனா.
  • வைரலான வீடியொ.
சாமி சாமி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சிறுமி: ஷேர் செய்த மந்தனா, வைரலான வீடியோ title=

வைரல் வீடியோ: கடந்த ஆண்டு 'புஷ்பா: தி ரைஸ்' படம் வெளியானது. அது வெளியானது முதல் அதன் வசனங்களும் பாடல்களும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றுவிட்டன. இன்றும் இவை அனைவரது நாவிலும் உள்ளன. இப்படம் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் முன்னெப்போதும் இல்லாதது. சமூக வலைதளங்களில் இப்படத்தின் மோகம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மக்கள் அதன் பாடல்களில் நடன ரீல்களை இன்னும் உருவாக்குகிறார்கள். அதே சமயம் சூப்பர் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுனின் டயலாக்குகளை லிப் சின்க் செய்பவர்களும் உண்டு. சமீபத்தில் வெளிவந்த ஒரு வீடியோவில், 'சாமி சாமி' பாடலுக்கு ஒரு பள்ளி மாணவி மனதைக் கவரும் விதத்தில் நடனமாடியுள்ளார். 

நடனத்தின் மூலம் நடிகையின் மனதை வென்ற பள்ளி மாணவி

இந்த வீடியோ ஒரு பள்ளியில் நடன ஒத்திகையின் போது எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. மற்ற குழந்தைகளும் பின்னணியில் நடனமாடுவதைக் காண முடிகின்றது. ஆனால் நடுவில் அழகான பெண் பாடலுக்கு லிப்-சிங்க் செய்து முழு நம்பிக்கையுடன் நடனமாடினார். இது தவிர, அவர் பாடலின் ஹூக் ஸ்டெப்பை கச்சிதமாக செய்கிறார். நடனம் முழுவதிலும் அழகான புன்னகையையும் காண முடிகின்றது. 

மனதை தொடும் வீடியோவை புஷ்பா பட நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார். சிறுமியின் நடனத்தால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த அவர், 'மேட் மை டே.. நான் இந்த அழகான பெண்ணை சந்திக்க விரும்புகிறேன். நான் எப்படி சந்திப்பது?' என அழுதியுள்ளார். 

மேலும் படிக்க | காதலியை கரெக்ட் பண்ண நடுரோட்டில் காதலன் செய்த செயல்: வீடியோ வைரல் 

சமூக ஊடகங்களின் பட்டையை கிளப்பும் நடனம் 

 

இந்த வீடியோ பல்வேறு தளங்களில் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி டெல்லியைச் சேர்ந்த திமர்பூர் எம்எல்ஏ திலீப் பாண்டேவும் இன்ஸ்டாகிராமில் இதை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவுக்கு அவர், 'இது மிகவும் அழகாக இருக்கிறது. இந்த அழகான குட்டி தேவதை யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் எனது நாளுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளார்’ என எழுதியுள்ளார். 

இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுக்ளை அளித்து வருகின்றனர். அந்த சிறுமியை பாராட்டி ஹார்ட் மற்றும் காதல் ஈமோஜிகளை அளித்து வருகின்றனர்.

ஒரு பயனர், 'மிக அழகான வீடியோ' என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், 'இந்த வீடியோ எனது நாளை சூப்பராக்கியது’ என கமெண்ட் செய்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் 2021 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாக உருவெடுத்தது. இது மிக அதிக வசூல் செய்த தெலுங்கு படங்களில் ஒன்றாகும்.

மேலும் படிக்க | தாத்தா ஆடும் ஆட்டம், பாத்தா ஆடிப்போயிடுவீங்க: கிரிக்கெட் தாத்தாவின் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News