அனுஷ்கா சர்மா-விராட் கோலி தம்பதிகள் தங்கள் மகளின் புகைப்படத்தை இதுவரை வெளியிடாமல் வைத்திருந்தார்கள். தற்போது விராட்டின் மகள் வாமிகாவின் புகைப்படம் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்துக்கு விராட் கோலி கிளம்பிச் சென்றபோது, மனைவி அனுஷ்கா மற்றும் மகள் வாமிகாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்போது மும்பை விமான நிலையத்தின் வெளியே ஒருவர் எடுத்த இந்த் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றுப்பயணத்தில் கலந்துக் கொள்ளும் இந்திய வீரர்கள் தங்கள் குடும்பத்தை அழைத்து வருவதற்கு இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியது. எனவே இந்திய வீரர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் பயணிக்கின்றனர்.


Also Read | வேகன் உணவுமுறைக்காக ட்ரோலாகும் விராட் கோலி, காரணம் என்ன?


நான்கு மாத கால சுற்றுப்பயணத்திற்காக, அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் தங்கள் மகள் வாமிகாவுடன் மும்பை விமான நிலையத்திற்கு வநதபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.  


அனுஷ்கா ஷர்மா தனது கைக்குழந்தையை மார்போடு அணைந்திருந்தார். தலை மூடப்பட்டிருந்ததால், வாமிகாவும் முழுத் தோற்றமும் தெரியவில்லை. ஆனால், எப்போது இந்த காட்சி கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது.


வாமிகாவை ஏந்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இது  வாமிகாவின் முதல் வெளிநாட்டு பயணம் என்றால், தனது மகளுடன் மேற்கொள்ளும் முதல் சர்வதேச சுற்றுப்பயணம் என்றும் சொல்லலாம்.  


Also Read | Live-ஆக இருப்பது தெரியாமல் பேசிய Kohli, Shastri: லீக் ஆகி வைரல் ஆகிறது சுவாரசியமான ஆடியோ


இதற்கு முன்பும் விருஷ்கா ஜோடி வாமிகா இடம்பெறும் சில புகைப்படங்களை தங்கள் சமூக ஊடக கணக்கில் பகிர்ந்துள்ளனர், ஆனால் குழந்தையின் முகம் அதில் காட்டப்படவில்லை.


இப்போது வைரலாகியிருக்கும் புகைப்படத்திலும் வாமிகாவின் முகம் தெரியவில்லை என்றாலும், விராட்-அனுஷ்கா ஜோடி பதிவிட்ட படங்களை விட மிகவும் நெருக்கமாக குழந்தையை காட்டும் புகைப்படம் இது.


Also Read | Success Mantra: சச்சின் டெண்டுல்கரின் வெற்றி ரகசியத்தை சொல்லும் சத்குரு; இது சரியா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR