சமூக ஊடகங்கள் தகவல் களஞ்சியங்களாக உள்ளன. இவற்றில் நமக்கு கிடைக்கும் தகவல்கள் சில சமயங்களில் வியப்பை தருவதாகவும், சில சமயங்களில் அதிர்ச்சி தருவதாகவும் உள்ளது. தோட்டம் என்றால், நம் மனதில் உடனே தோன்றுவது, அழகான பூக்கள் நிறைந்த, அமைதியான, மனதிற்கு இதமான இடம். ஆனால், இங்கே நாம் காணும் தோட்டம், மனதிற்கு, அமைதிய வழங்கும் தோட்டம் அல்ல. பீதியை உண்டாக்கும் தோட்டம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம், இங்கிலாந்தில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டத்தின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  100 க்கும் மேற்பட்ட ஆபத்தான தாவரங்களைக் கொண்ட இந்த தோட்டம் 'உலகின் கொலைகார தோட்டம்' என்பதைக் காட்டுகிறது. இந்த புகைப்படம் ஜூன் 25 அன்று ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இங்கிலாந்தின் நார்தம்பர்லேண்ட் கவுண்டியில் உள்ள அல்ன்விக் என்ற இடத்தில் இந்த விஷத் தோட்டம் உள்ளது. தோட்டத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய இரும்பு கேட் உள்ளது. சந்திரமுகி படத்தில் வரும் வசனம் போல், ‘கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே’ என்ற வசனம் தான் இதை பார்க்கும் போது ஞாபகம் வருகிறது.  கேட்டின் வாயிலில், தோட்டத்திற்கு வரும் பார்வையாளர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கும் போர்டு வைக்கப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 600,000 மக்கள் தோட்டத்திற்கு வருகை தருகின்றனர் எனவும், மேலும் வழிகாட்டியுடன் மட்டுமே சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் தோட்டத்தை பராமரிக்கும் அதிகாரிகளின் கூறுகின்றனர். சுற்றுலாப் பயணிகளைத் தவிர, உலகம் முழுவதிலுமிருந்து தாவரவியலாளர்களும் இங்கே வருகை தருகின்றனர். ஆனால் பலத்த எச்சரிக்கைகள் விடுத்துள்ள போதிலும், சிலர் இந்த கொடிய தாவரங்களின் செடிகளை, பூக்களை முகர்ந்து பார்த்து, அதன் நச்சுப் புகையை சுவாசித்து மயக்கமடைகின்றனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | Viral News: வயிற்றில் இருந்த ஆணி, பேட்டரி, நாணயங்கள்... அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்



 


இந்த தோட்டம் 2005 ஆம் ஆண்டில் நார்தம்பர்லேண்டின் டச்சஸ் ஜேன் பெர்சி என்பரால் கற்பனை செய்யப்பட்டது என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | பூமியை நெருங்கும் எவரெஸ்டை விட பெரிய வால் நட்சத்திரத்தினால் ஆபத்து உள்ளதா...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR