ஆந்திராவில் YSRCP & TDP பிராண்ட் ஆணுறைகள் வாக்காளர்களுக்கு பரிசு! அடுத்து என்ன? வைரல் வீடியோ!
Why Condoms In Election Campaign : தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்கு ஆணுறைகளை பரிசாக கொடுக்கும் வித்தியாசமான சம்பவங்கள் ஆந்திராவில் அரங்கேறி, சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது
Andhra Pradesh Condoms Controversy : தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்களுக்கு பரிசு கொடுப்பதே தவறு... ஆனால், கொடுக்கப்படும் பரிசுப் பொருளில் ’பிராண்ட்’ அடித்து கொடுத்து மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும்? ஆந்திரப்பிரதேச மாநிலத்தில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி (YSR Congress Party (YSRCP)) மற்றும் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி (Telugu Desam Party (TDP)) என இரு பிரபலமான அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் சின்னங்களைக் கொண்ட ஆணுறை பாக்கெட்டுகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
தேர்தல் வந்தாலே வாத விவாதங்களும், சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது மற்றொருவர் சுமத்துவது சகஜம் என்றாலும், ஆந்திரப் பிரதேசத்தில் இதுவரை யாருமே பார்த்திராத வித்தியாசமான வினோதமான அரசியல் நாடகம் அரங்கேறியது.
ஆந்திர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் YSRCP, TDP பிராண்டட் ஆணுறைகள்
ஆந்திராவில் வியாழக்கிழமையன்று (2024 பிப்ரவரி 22) ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் பெயர்கள் மற்றும் சின்னங்களைக் கொண்ட ஆணுறை பாக்கெட்டுகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வைரலாகும் ஆணுறை விநியோக வீடியோ
இந்த வினோதமான அரசியல் நாடகம், வாக்குகளுக்காக வாக்காளர்களைக் கவர கட்சிகள் எந்த எல்லைக்கு போகும் என்று காட்டுவதாக மக்கள் நினைத்தால், சம்பந்தப்பட்ட இரண்டு கட்சிகளுமே, ஒன்றன் மீது மற்றொன்று புழுதிவாரி தூற்றிக் கொள்கின்றன. அதாவது, இது தவறு என்று இரு கட்சிகளுக்குமே தெரிகிறது. குற்றம் செய்யவில்லை என்று தன்னை பாதுகாத்துக் கொண்டு, ஆனால் நீ இப்படி செய்தது கேவலம் என்று பிற கட்சியை குற்றம் சொல்கின்றன.
மேலும் படிக்க | India Alliance: டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதி உடன்பாடு
கட்சிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ள ஆணுறை பாக்கெட் விநியோக வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டத்தை அடுத்து, அரசியலின் தரம் தாழ்ந்துவிட்டதாக கட்சிகள் தங்களுக்குள் குற்றம் சாட்டிக் கொள்வதைப் பார்த்து, மக்கள் என்ன கொடுமை சார் இது என்று புலம்பும் நிலைக்கு சென்றுவிட்டார்கள்.
’உனக்கு வந்தா தக்காளி சட்னி, எனக்கு வந்த ரத்தம்’ என்ற பிரபல சினிமா டயலாக் தான் நினைவுக்கு வருகிறது என்று ஒரு பயனர் பதிவிட்டிருப்பது தான் மாஸ் பஞ்ச் என்று சொல்லலாம். இரு கட்சிகளும் வாய்ச் சண்டையில் ஈடுபடுவது ஒருபுறம் என்றால், அதற்கான மூலக் காரணமான ஆணுறை பாக்கெட்களின் டிசைன் நன்றாக இருப்பதாவும் நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.
எதுக்கெல்லாம் கட்சி சின்னம் தேவை என்ற விவாதமும் ஒரு பக்கத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சிபி மற்றும் முன்னாள் முதல்வர் என் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் கொண்ட ஆணுறை பாக்கெட்டுகள் வாக்காளர்களுக்கு கட்சிக்காரர்களால் வழங்கப்படுவதை வீடியோக்கள் காட்டுகின்றன.
“கட்சி, தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்களுக்கு ஆணுறைகளை விநியோகிப்பது சரியா? இது எந்த வகையான விளம்பர பைத்தியம்? அடுத்து வயாக்ரா கொடுக்கத் தொடங்குவார்களா? பிறகு, அவர்கள் அங்கேயே நின்றுவிடுவார்களா அல்லது அடுத்தக் கட்டத்தை நோக்கி இன்னும் தரம் தாழ்ந்து செல்வார்களா? என்று டெக்கான் 24x7 எக்ஸ் தள கணக்கில் இருந்து வெளியிடப்பட்ட வீடியோவுக்கு YSRCP கட்சி பதிவிட்டுள்ளது.
ஒய்எஸ்ஆர்சிபியின் வீடியோ
YSRCP-யின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் தெலுங்கு தேசம் கட்சி, YSRCP சின்னத்துடன் கூடிய ஆணுறை பாக்கெட்டின் படத்தைப் பகிர்ந்து, ஆளும் கட்சிக்கு பதிலடி கொடுத்தது. "இதுதான் கட்சி பேசும் 'சித்தாந்தமா?" என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பிரச்சாரத்திற்கு எதிர்க்கட்சியினர் பதிலடி கொடுக்கின்றனர்.
இன்னும் தேர்தல் அறிவிக்காத நிலையில், அரசியல் கட்சிகள் நடத்தும் பிரச்சாரம் இப்படி என்றால், தேர்தல் அறிவிப்பு வந்தபிறகு என்னவெல்லாம் நடக்கும் என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
ஏப்ரல்-மே மாதங்களில் ஆந்திர மாநில சட்டசபை மற்றும் மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலைய்ல், ஒய்எஸ்ஆர்சிபியை எதிர்கொள்ள நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ