நமது ஒவ்வொரு நாளிலும், நமக்கு சிறிது நேரம் மகிழ்ச்சியை தருவதில் முக்கிய பங்கு வகிப்பது இணையம் தான், இணையத்தில் தினமும் பகிரப்பட்டு வரும் பல வீடியோக்கள் நமது சோகத்தை நொடிப்பொழுதில் நீக்கி மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளன.   சில நிகழ்வுகள் நமக்கு பிடித்தமானதாக இல்லையென்றாலும், பல நிகழ்வுகள் நமது ஃபேவரைட் லிஸ்டில் இடம்பிடித்துவிடுகின்றன.  அதிலும் பெரும்பாலான இணையாவசிகளுக்கு விலங்குகளின் குறிப்பாக வீட்டு வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை போன்றவற்றின் வீடியோக்கள் பிடித்துப்போய் விடுகின்றன.  வளர்ப்பு பிராணிகள் செய்யும் குறும்புத்தனங்கள் இணையவாசிகளின் இதயங்களை வெகுவாக கவர்ந்துவிடுகின்றன, தற்போது அதுபோன்று செல்ல பிராணிகளான பூனைக்குட்டிகளின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் ஒரு சுவற்றின் மீது மூன்று பூனைக்குட்டிகள் அடுக்கடுக்காக அமர்ந்து கொண்டு உளவு பார்ப்பது போல எதையோ தீவிரமாக பார்த்துக்கொண்டு இருக்கின்றது.  அந்த பூனைக்குட்டிகள் நீண்ட நேரமாக அப்படியே சுவரின் மீது எட்டிப்பார்த்து கொண்டே இருக்கிறது.  நாடோடிகள் படத்தில் நண்பனின் காதலியை கடத்த சசிகுமார், பரணி மற்றும் விஜய் வசந்த் ஆகியோர் இரவு நேரத்தில் சென்று சுவற்றின் மீது எட்டி பார்க்கும் ஒரு காமெடி காட்சி வரும், அதுபோன்று இந்த பூனைக்குட்டிகள் பார்ப்பது அமைந்திருக்கிறது.


 



மேலும் படிக்க | மணமகளை பார்த்து மயங்கிய மணமகன் மேடையில் செய்த வேலை: வைரல் வீடியோ


இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து இருக்கிறது, இந்த வீடியோவை பார்த்த ஒரு நெட்டிசன் அந்த பூனைக்காலி சிசிடிவி கேமரா என்று கிண்டல் செய்துள்ளார்.  இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையாவசிகள் பார்த்து ராசிரித்துள்ளனர்.  இதுவரை இந்த வீடியோவிற்கு பதினோறாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல கமெண்டுகள் குவிந்து வருகின்றன.


மேலும் படிக்க | ஆசையாய் வந்த கணவன், வெச்சி செஞ்ச மனைவி: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ