Viral Video Of Airplane Struggling To Land : கடந்த 3 நாட்களாக, தமிழகம் முழுவதும் பேய் மழை பெய்தது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த இந்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து, முக்கிய சாலைகளில் ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டிருந்தது. முதலில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக உருமாறி மெல்ல மெல்ல தமிழகத்தை நோக்கி வரத்தொடங்கியது. சில கி.மீ வேகத்திலேயே நகர்ந்து வந்த இந்த ஃபெஞ்சல் புயல், ஒரு வழியாக நேற்று இரவு சென்னையை கடந்து சென்று, பின்னர் புதுச்சேரி நோக்கி நகர்ந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமான நிலையம் மூடல்!


புயல் மற்றும் அடைமழை காரணமாக, சென்னையில் சாலைகள் பல நீரில் மூழ்கின. இதையடுத்து, உள்ளூர் போக்குவரத்து சேவைகளும் சில மணி நேரம் முடங்கின. இந்த நிலையில், விமான போக்குவரத்துகளும், முடங்கின. இதனால், சென்னை விமான நிலையம், சுமார் 13 மணிநேரத்திற்கு இயங்கவில்லை. 


வைரல் வீடியோ:


தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புயல் காரணமாக, சென்னை விமான நிலைய ஓடு பாதையில் ஒரு விமானம் தரையிரங்க முடியாமல் அவதிப்பட்டது பார்ப்பதற்கே திகிலை கிளப்பும் வகையில் உள்ளது. 


 



ஆபத்தான முறையில் இவ்வாறு விமானங்கள், தரையிரங்குவது முறையா என சிலர் கேள்வி எழுப்பி வருகின்ரனர். இந்த வீடியோ, சரியாக புயல் சென்னையை கடந்து கொண்டிருந்த சமயத்தில் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. ஒரு சிலர், வீடியோவாக பார்க்கும் நமக்கே இப்படி இருக்கிறதே, அந்த விமானத்திற்குள் அமர்ந்திருந்தவர்களுக்கு எவ்வளவு திகிலாக இருந்திருக்கும் என்று சிலர், கவலை தெரிவித்திருக்கின்றனர். 


மேலும் படிக்க | Chennai Rains : மழை வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோ.. பேருந்து ஓட்டுனர் செய்த உதவி..வைரல் வீடியோ!


மேலும் படிக்க | வெள்ளத்தில் மிதக்கும் சென்னை!! கடல் போல் தேங்கிய மழைநீர்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ