Trending Video of Life or Death: முதலைகள் நிறைந்த ஆற்றில் மூழ்கிக் கொண்டிருக்கும் சிறுவனின் அலறல் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. வாழ்வா சாவா என போராடும் சிறுவனின் அபயக் குரல் எழுப்பும் அபாயக் குரல் வீடியோ வைரலானது, வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவனை மீட்கும் முயற்சி வெற்றி பெற்றதா அல்லது தோல்வியடைந்ததா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சம்பல் ஆற்றின் பெருகிப்பாயும் நீரோட்டத்தில் மூழ்கிய சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதலைகள் சிறுவனைச் சுற்றி சுற்றி வருவதையும் காணலாம். வீடியோவில், SDRF குழு குழந்தையை காப்பாற்ற படகுடன் வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கனமழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிறுவன் மூழ்கி கிடப்பது போன்ற வீடியோவை இணையவாசிகள் தொடர்ந்து பார்த்து வைரலாக்கி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவில், முதலைகள் நிறைந்த இந்த சம்பல் நதியின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்திருக்கிறது. நீரின் ஓட்டமும் மிகவும் வேகமாக உள்ளது, நதியின் அலைகள் மிக உயரமாக எழும்புவது போல் தெரிகிறது.


மேலும் படிக்க | மாப்பிள்ளைக்கு கிஸ் கொடுத்த மச்சினிச்சி: ஷாக் ஆன மணமகளின் வைரல் வீடியோ


ரத்தத்தை உறைய வைத்த இந்த வீடியோ காட்சியை பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது.  ட்விட்டரில் வைரலாகி வரும் இந்த வீடியோ கிளிப்பில், ஆற்றின் நடுவில் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி இருப்பது, வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுவதைக் காணலாம். சிறுவன் சத்தமாக கத்தி, அழுது அலறி காப்பாற்றுமாறு கெஞ்சுகிறார். அதே நேரத்தில், சம்பல் நதியில் உள்ள முதலைகள் சிறுவனை சுற்றி வருவதையும் பார்க்க முடிகிறது.


பார்க்கும் நமக்கே இப்படி மயிர் கூச்செரிந்தால், அந்த சிறுவனுக்கு எப்படி இருந்திருக்கும்? சிறுவனின் அலறல் உச்சக் கட்டத்தை அடைந்து மரண பயத்தை வெளிப்படுத்துகிறது.



உண்மையில் அந்த சிறுவன் மரணத்தின் வாயிலுக்கே சென்றுவிட்டான் என்று சொல்லலாம். ஆனால்,  மாநில பேரிடர் மீட்புப் படை SDRF குழுவின் முயற்சியால் அந்த சிறுவன் காப்பாற்றப்பட்டான். வெள்ளம் பாதித்த பகுதியில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட SDRF குழுவினர், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த சிறுவனை பார்த்துவிட்டார்கள்.


மேலும் படிக்க | பந்தா காட்டிய மாப்பிள்ளை, இரண்டே நிமிடத்தில் வழிக்கு கொண்டுவந்த மணப்பெண்: வைரல் வீடியோ


துரிதமாக செயல்பட்ட மீட்புப் படையினர் உடனடியாக களத்தில் இறங்கினார்கள். வேகமாக காற்று வீசியதால், தண்ணீர் அலைகள் அதிகமாக எழும்பி, படகை குழந்தையிடம் கொண்டு செல்வதை தடுத்தது. வீசும் சூறைக்காற்றில் படகு கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சம் இருந்தது, அத்துடன் அங்கு சுற்றிக் கொண்டிருந்த பிரம்மாண்ட முதலைகளும் சிறுவனை காப்பாற்றப் போவதை தாமதமாக்கின.


நேரம் ஆக ஆக சிறுவனின் கூச்சலும் அதிகரித்தது. SDRF குழு, முதலைகளை கண்டு விலகாமல், சிறுவனின் அருகில் சென்று சிறுவனை மீட்டனர். இந்த வைரலான வீடியோ கிளிப் பிந்து லால் மீனா என்பவரின் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ கிட்டத்தட்ட 4மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த பதிவை, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் கோவிந்த் தோடசரா உள்ளிட்ட பலர் டேக் செய்துள்ளனர்.


SDRF குழுவின் தயார்நிலையும் குழந்தையின் தைரியமும்
இந்த வீடியோவை ஐஆர்எஸ் அதிகாரி டாக்டர் பகீரத் சவுத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துளார். பலரும் இந்த வீடியோவை பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிர்ந்துள்ளனர். இக்கட்டான சூழ்நிலையிலும் பொறுமையை இழக்காத சிறுவனின் துணிச்சலை மக்கள் பாராட்டி வருகின்றனர்.  


மேலும் படிக்க | இது புதுசா இருக்கே..! மருந்து டப்பாவில் திருமண அழைப்பிதழ் அடித்த தம்பதி! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ