’பயப்படாத... பயப்படாத’ நாய்க்கு நேர்ந்த கொடுமை; Viral Video

நாய்க்குட்டி ஒன்று திடீரென பயந்து கீழே விழுந்து, பின்னர் ஒன்றும் நடக்காதது நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 25, 2022, 07:37 PM IST
’பயப்படாத... பயப்படாத’ நாய்க்கு நேர்ந்த கொடுமை; Viral Video title=

நாய்களுக்கு என்று தனிப்பட்ட குணாதிசயம் உண்டு. விலங்குகள் மற்றும் மனிதர்கள் இரு ஜீவன்களுடன் பழகும் விலங்காக இருக்கிறது. இவை மனிதர்களுடன் பழகும் நாய்களிடம், மனிதர்களுக்கே உரித்தான சில சைகைகளையும் சேட்டைகளையும் காண முடியும். சோஷியல் மீடியா வளர்ச்சிக்குப் பிறகு நாய் உள்ளிட்ட விலங்குகளின் வீடியோக்கள் பெருமளவில் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்ததால், நாய்களின் சின்ன சின்ன ரியாக்ஷன்களைக் கூட சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் பதிவிடுவதை பார்க்க முடிகிறது.

அந்தவகையில், வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்குட்டி ஒன்று படி மீது ஏறிச் சென்று திடீரென கீழே விழுகிறது. பின்னர் அதுவாகவே எழுந்து எதுவும் நடக்காதது போல் நின்று கொள்கிறது. ஏதோ ஒரு சத்தத்தைக் கேட்டு அது பயப்படுக்கிறது. ஆனால், உடனடியாக அந்த பயத்தில் இருந்து வெளிவந்துவிடுகிறது. சிலநொடிகள் மட்டுமே அந்த வீடியோ இருந்தாலும், காண்போரை ரசிக்க வைக்கிறது. வீடியோ எடுத்தவர் கூட நாயின் செய்கையை பார்த்து சிரிக்கிறார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Doggos Doing Things (@doggosdoingthings)

இந்த வீடியோவானது Doggos Doing Things என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு ஷேர் செய்யப்பட்ட இந்த வீடியோ இதுவரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. கிட்டத்தட்ட 64,000 லைக்குகளையும், நூற்றுக்கணக்கானோர் கமெண்டுகளையும் அள்ளி வீசியுள்ளனர். இதுபோன்ற வீடியோக்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும், மன நிறைவாக இருப்பதாக நெட்டிசன் தெரிவித்துள்ளார். மன அழுத்தத்துடன் வீட்டிற்கு வரும்போது இப்படியான வீடியோக்களை பார்த்தால் திடீரென இனம் புரியாத மகிழ்ச்சி வந்துவிடுவதாகவும், நாய்க்குட்டியின் செய்கை காமெடியாக இருப்பதாகவும் மற்றொரு கூறியிருக்கிறார்.  

மேலும் படிக்க | நடுரோட்டில் பைக்கில் காதலர்கள் செய்த வெறிச்செயல்: வீடியோ வைரல்

மேலும் படிக்க | 75 இன்ச் ஸ்மார்ட் டிவியை விளையாட்டு பொருளாக்கிய குழந்தை; பதறிப்போன தாய் செய்த காரியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News