நாகப்பாம்பின் தலையில் ரத்தினம் இருப்பதாகவும், அதற்கு 'நாகமணி' என்று பெயர் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. நாகமணி நம்மிடம் இருந்தால், அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்றும், பல கோடிகளுக்கு அதிபதியாகி சக்ரவர்த்தியாக வாழலாம்; பொன், பொருள், பெருமை எல்லாம் தேடி வரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. நாகமணி தொடர்பான பல கதைகளை புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் உண்மை என்ன என்பது இன்னும் பெரிய மர்மமாகவே உள்ளது. சிலர் நாகமணி இருப்பதாக நம்புகிறார்கள், பலரோ நாகமணி என்று ஒன்று இல்லை என்றே கூறுகிறார்கள். பத்திலிருந்து முப்பது ஆண்டுகள் வரை பயன்படுத்தாமல் இருக்கிற பாம்பின் விஷம்தான் ஒரு கட்டத்தில் இறுகி நாகமணியாக மாறுவதாக சிலர் சொல்கிறார்கள். சிலர் அதனை நாக ரத்தினம் எனவும் சொல்கிறார்கள். எனினும் நாக மணி தொடர்பான மர்மங்கள் தொடர்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 இந்து புராணங்களில் நாகப்பாம்பு அல்லது ராஜ நாகத்திற்கு சிறப்பு இடம் உண்டு. சிவன் தனது கழுத்தில் நாகப்பாம்பை அணிகலனாக அணிந்துள்ளார். அதனால் சிவபெருமானை வழிபடும் அனைவரும் நாகப்பாம்பையும் வழிபடுகின்றனர். சிவராத்திரியில் சிவனுடன் சேர்ந்து நாகப்பாம்பையும் மக்கள் வழிபடுகின்றனர். இந்துக்கள் நாக சதுர்த்தி அன்று நாகப்பாம்புக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்கின்றனர். அதன் மீது பால் ஊற்றி பக்தியுடன் வழிபடப்படுகிறது. இந்நிலையில், பளப்பளப்புடன் காணப்படும் நாகமணியை பாதுகாக்கும் ராஜ நாகம் ஒன்றின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ


வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:



நாகப்பாம்பு நாகமணிக்கு காவலாக இருப்பதை பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் நாகமணியை நாகப்பாம்பு காவல் காக்கும் காட்சி தற்போது கேமராவில் சிக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாகமணியைக் காவல் காத்துக் கொண்டிருக்கும் ராஜநாகத்தின் இந்த வீடியோ உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இரவில் கூட அந்த பாம்பு கண்காணித்து வருகிறது. 


மேலும் படிக்க | Viral Video: அம்பை போல பாயும் சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான முதலை!


மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ