வைரல் வீடியோ: இணையத்தில் நாம் நமது தினசரி வாழ்வில் பொதுவாக பார்க்க முடியாத பல அரிய நிகழ்வுகளை இணையத்தில் கண்டு மகிழ்கிறோம். இவற்றின் மூலம் நமது மன அழுத்தமும் இறுக்கமும் கூட குறைகின்றன. குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் மக்களால் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன. இவற்றுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுவும் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் செய்யும் சில கியூட் செயல்களை பலர் அவ்வப்போது இணையத்தில் பகிர்கிறார்கள். இவை இணையவாசிகளின் உள்ளத்தை கொள்ளைக் கொள்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செல்லப்பிராணிகள் நமது சிறந்த நண்பர்கள். பலர் தங்கள் செல்லப்பிராணிகளை குடும்ப உறுப்பினர்களைப் போலவே தான் நடத்துகிறார்கள். செல்லப்பிராணிகளும் அவர்களின் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே உள்ளது என்றால் மிகையைல்லை. மீன், நாய், பூனை மற்றும் பறவைகள் உட்பட பல வகையான செல்லப்பிராணிகள் நம் வீட்டில் மகிழ்ச்சியை நிரப்புகின்றன என்றால் மிகையில்லை.


செல்ல பிராணிகள் தங்கள் வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான செயல்களால் நம்மை மிகவும் கவர்ந்திழுப்பார்கள். சில நேரங்களில், அவர்கள் தங்கள் அசாதாரண திறன்களால் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள். அப்படி ஒரு மனதைக் கவரும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கிளி ஒன்று பியானோ இசைப்பதைக் கண்ட இணையவாசிகள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். 


மேலும் படிக்க | Viral Video:நீரை கிழித்து இரையை பிடிக்கும் ஆஸ்ப்ரே பறவை! கடலில் ஒரு மீன் வேட்டை!


வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:


 



 


கிளி தனது மூக்கினால் சிறிய பியானோவை வாசிப்பதை வைரல் வீடியோவில் காணலாம். இந்த காட்சிகளை CCTV_IDIOTS என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கிளி அதன் மூக்கை பயன்படுத்தி அழகாக பியானோ வாசிக்கிறது. இரு நாட்களுக்கு முன் பதிவிட்ட நிலையில், இதனை தற்போது 95,000க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மிகவும் வைரலாகி வரும் வீடியோ, மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளது.


கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். நாம் பேசுவதை திருப்பிச் சொல்லும் திறன் பெற்றவை. மனிதர்களின் பேச்சைப் புரிந்து கொள்வதில் சிறப்பு வாய்ந்தவை. விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவு. கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள் என கூறப்படுகிறது . கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. 


மேலும் படிக்க | ‘இவருதாங்க காட்டோட கண் டாக்டர்..ஃபீஸ் கொஞ்சம் அதிகம்’: குரங்கு டாக்டர் வைரல் வீடியோ
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ