‘இவருதாங்க காட்டோட கண் டாக்டர்..ஃபீஸ் கொஞ்சம் அதிகம்’: குரங்கு டாக்டர் வைரல் வீடியோ

Funny Monkey Video: குரங்கின் வேடிக்கையான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தால் கண்டிப்பாக உங்களால் உங்கள் கண்களையே நம்ப முடியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 18, 2023, 02:57 PM IST
  • விலங்குகளில் குறிப்பாக குரங்குகள் சமூக ஊடகங்களின் ஹீரோக்களாகவே பார்க்கப்படுகின்றன.
  • இவற்றின் குறும்புகளுக்கான வீடியோக்களுக்கு மக்களிடையே பெரிய க்ரேஸ் உள்ளது.
  • அவற்றின் வித்தியாசமான மற்றும் தனித்துவமான பாணியின் காரணமாக, மக்கள் அவற்றை மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புகிறார்கள்.
‘இவருதாங்க காட்டோட கண் டாக்டர்..ஃபீஸ் கொஞ்சம் அதிகம்’: குரங்கு டாக்டர் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

விலங்குகளில் குறிப்பாக குரங்குகள் சமூக ஊடகங்களில் ஹீரோக்களாகவே பார்க்கப்படுகின்றன. இவற்றின் குறும்புகளுக்கான வீடியோக்களுக்கு மக்களிடையே பெரிய க்ரேஸ் உள்ளது. அவற்றின் வித்தியாசமான மற்றும் தனித்துவமான பாணியின் காரணமாக, மக்கள் அவற்றை மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புகிறார்கள். இதேபோன்ற வீடியோ இன்று தற்போது வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | பாம்புகளை செல்லமா தட்டி தூங்கவைக்கும் பெண்: காணக்கிடைக்காத வைரல் வீடியோ

குரங்குகளின் புத்திசாலித்தனம் பற்றி பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம், நிஜத்தைலும் பார்த்திருக்கிறோம். மனிதர்கள் செய்யும் செயல்களை குரங்குகள் அப்படியே செய்கின்றன. தற்போது வெளிவந்துள்ள வீடியோவும் குரங்கின் புத்திசாலித்தனத்துக்கு சாட்சியாக அமைகின்றது. இணையவாசிகள் இதை ஷேர் செய்து வைரல் ஆக்கி வருகின்றனர். இது மிகவும் வித்தியாசமான வீடியோவாக உள்ளது. 

குரங்கின் மாஸ் வீடியோவை இங்கே காணலாம்:

வைரலாகி வரும் இந்த  வீடியோ-வில், குரங்கு ஒன்று டாக்டராகி தனது நண்பனுக்கு கண் பரிசோதனை செய்வதை பார்க்க முடிகிறது. இதற்காக அது கீழே கிடக்கும் இலையை தனது கருவியாக்கி அதன் உதவியுடன் நண்பனின் கண்களை சுத்தம் செய்கிறது. குரங்கு கண்ணில் சென்ற தூசியை வெளியே எடுக்கும் விதத்தைப் பார்த்தால், அது காட்டில் உள்ள அனைத்து மிருகங்களுக்கும் சிகிச்சை அளிக்கும் டாக்டர் போல காட்சியளிக்கிறது. 

இந்த வீடியோ இணையத்தை அதிர வைத்துள்ளது. இந்த வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமில் balisingh07 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'இதுபோன்ற காட்சிகள் அரிதாகவே காணப்படுகின்றன.' என ஒரு பயனர் எழுதியுள்ளார். 'இந்த வீடியோ மனதுக்கு இதமளிக்கிறது. குரங்கின் செயல் ஆச்சரியமாக உள்ளது’ என மற்றொருவர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | Viral Video:நீரை கிழித்து இரையை பிடிக்கும் ஆஸ்ப்ரே பறவை! கடலில் ஒரு மீன் வேட்டை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News