முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் நாள்தோறும் வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளை வனப் பகுதிகளுக்குள் அழைத்துச் சென்று வன விலங்குகளை காணும் வகையில் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வது வழக்கம். வனப் பகுதிகளுக்குள் செல்லும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் யானை, மான், புலி, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காட்டில் உள்ள விலங்கு வாழ்க்கை தினசரி சவால்களால் நிரம்பியுள்ளது. வேட்டையாட துடிக்கும் விலங்குகளிடம் இரையாகாமல் தங்களை காத்துக் கொள்ள தினமும் சில விலங்குகள் போராட வேண்டியிருக்கும். சில சமயங்களில் வலிமையான இரு விலங்குகள் கூட மோதிக் கொள்ளும். அதை பார்க்கவே பயங்கரமானதாக இருக்கும். வல்லவன் வாழ்வான் என்ற கூற்று, காட்டு வாழ்க்கைக்கு சிறப்பாக பொருந்தும். தற்போது புலி ஒன்று மானை வேட்டையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. காட்டில் புலி மிகவும் ஆபத்தான விலங்காக கருதப்படுகிறது. வேட்டையாடுவதை பொறுத்தவரை, புலியின் கையில் சிக்கிய விலங்கு தப்பிப்பது மிகவும் கடினம்.


மேலும் படிக்க | Wild Buffalo Hunt: காட்டுப்பூனை தூக்கி பந்தாடிய காட்டெருமை வீடியோ வைரல்


வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



வனப் பகுதிகளில் மாமிச விலங்குகள் வேட்டையாடுவதை காண்பது மிக அரிது. இந்நிலையில் இன்று முதுமலை வனப்பகுதியில் சூழல் சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் புலி ஒன்று மான் கூட்டத்தை விரட்டி வேட்டையாடிய காட்சிகளை வீடியோ பதிவு செய்துள்ளனர். நேரடியாக இக்காட்சிகளை திக் திக் என பதற்றத்துடன் புலி வேட்டையாடும் காட்சிகளை கண்டனர்.


மேலும் படிக்க | Viral Video: ஹூஹூம்.... இது தேர்ற கேஸ் இல்லை... குட்டியானையின் க்யூட் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ