தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணிபுரியும் IAS அதிகாரி சுப்ரியா சாஹு, ட்விட்டரில் ஒரு மிக மிக அழகான, சுவாரஸ்யமான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் இரண்டு பகுதிகள் உள்ளன: ஒரு புகைப்படம் மற்றும் ஒரு வீடியோ. இவை இரண்டிலும் இருவாட்சி பறவைகளின் போராட்டத்தை காணலாம். பறவைகள் வான்வழிப் போரில் ஆக்கிரோஷமாக ஈடுபடுவதை இந்த வீடியோ, காட்டுகிறது. படம் மற்றும் வீடியோ இரண்டும் தொழில்முறை புகைப்படக் கலைஞர் கே. ஏ. தனுபரனால் எடுக்கப்பட்டது. இவர் அசாதாரண காட்சிகளுக்காக விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்பிரியா சாஹூ "தமிழ்நாட்டின் நெல்லியம்பதி மற்றும் வால்பாறை பகுதிகளில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மலை இருவாட்சி பறவைகள் கூடுகின்றன. இரண்டு மலை இருவாட்சி பறவைகள் ஆக்ரோஷமான சண்டையில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட அற்புதமான படம் மற்றும் வீடியோ தோ. தனுபரனால் படம் பிடிக்கப்பட்ட அழகிய காட்சி" என பதிவிட்டுள்ளார். இருப்பினும், பல ட்விட்டர் பயனர்கள் நெல்லியம்பதி கேரளாவில் இருப்பதாக கருத்துக்களில் பதிவிட்டு திருத்தினர்.
மேலும் படிக்க | Wild Buffalo Hunt: காட்டுப்பூனை தூக்கி பந்தாடிய காட்டெருமை வீடியோ வைரல்
வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:
Hundreds of Great Hornbills congregate in Nelliyampathy and Valparai regions in Tamil Nadu every year. Here is a brilliant capture of 'mid air casque butting' when two hornbills engage in an aggressive fight hitting with their casques.Captured by Dhanuparan #Hornbills pic.twitter.com/xeiA3cUTxf
— Supriya Sahu IAS (@supriyasahuias) January 2, 2023
மனதை கொள்ளை கொள்ளும் அற்புதமான வீடியோ கிட்டத்தட்ட 50,000 பார்வைகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றுள்ளது. மேலும் பல பயனர்களும் அதில் பல சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். "எந்தவொரு வனவிலங்கு அல்லது இயற்கை புகைப்படக் கலைஞரும் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான காட்சி" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.
மற்றொரு பயனர், "பறவைகள் இயற்கைக்கு மிகவும் அழகு சேர்க்கிறது, வாழ்க்கையை வளமாக்குகிறது. அனைவரும் வளமான வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள். அனைத்து உயிரினங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்!". மேலும், "ஆச்சரியங்கள் நிறைந்த மனித இனமே. விலங்குகள் மற்றும் பறவைகள் மீதான உங்கள் அன்பை நான் வணங்குகிறேன்" என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Viral Video: ஹூஹூம்.... இது தேர்ற கேஸ் இல்லை... குட்டியானையின் க்யூட் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ