மிருகங்கள் செய்யும் விஷயங்கள், நமக்கு பல சமயத்தில் சிரிப்பையும், இன்னும் சில சமயங்களில் அதீத சிரிப்பையும் வரவழைக்கும். 5 அறிவுதான் இருக்கிறது என்றாலும் கூட, அதை வைத்துக்கொண்டு இவை செய்யும் சேட்டைகள் இருக்கிறதே, அப்பப்பா..சொன்னால் அடங்காது. பொதுவாக, நல்ல மனிதர்கள் அனைவருக்குமே மிருகங்கள் எது செய்தாலும் பிடிக்கும். அந்த மிருகம் மிகவும் கொடூரமானது என்றாலும், அதை தூரத்தில் இருந்து ரசிக்க விரும்பும் மனிதர்களும் இங்குதான் வாழ்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐந்தரிவு உயிரினங்களான மிருகங்கள், பல சமயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் செய்கின்றன. ஆனால், மனிதர்களுடன் பழகிய சில காலங்களிலேயே அவர்களின் நடவடிக்கைகளை கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்றார் போல நடந்து காெள்கின்றன. என்னதான் மனிதனாக இருந்தாலும், மிருகமாக இருந்தாலும் தந்தை-தாய் என்ற நிலை அனைத்திற்கும் ஒன்றுதான். அப்படித்தான், இங்கு ஒரு கொரில்லா தன் குட்டிகளிடம் சிக்கித்தவிக்கிறது. அந்த காமெடி வைரல் வீடியோவை, இங்கு பார்ப்போம். 


வைரல் வீடியோ:


தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், மொத்தம் 3 கொரில்லாக்கல் இருக்கின்றன. இரண்டு குட்டிகள், ஒரு பெரிய கொரில்லா. குட்டி கொரில்லாக்களில் ஒன்று, தன் தந்தையின் முன் நின்று ஆட்டம் காண்பிக்க, இன்னொன்று அப்பாவின் முடியை பிடித்து இழுப்பது, பேண் பார்ப்பது என்று தன் சேட்டையை தொடர்கிறது. 



ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் பெரிய கொரில்லா, தன் தலையை சொரிந்து கொண்டிருக்கும் குட்டி கொரில்லாவை அலேக்காக தூக்கி இன்னொரு பக்கம் விடுகிறது. இன்னொரு கொரில்லாவும் “அய்யோ அப்பா டென்ஷனாயிட்டாரு..” என்பது போல தன் குகைக்குள் ஓடி ஒளிகிறது. இந்த வீடியோ காண்போரை சிரிக்க வைத்தும், ரசிக்க வைத்தும் வருகிறது. 


மேலும் படிக்க | மாட்டு சாணியை ஜாம் போல தடவி சாப்பிடும் நபர்! பார்த்தாலே வாந்தி வருது..வைரல் வீடியோ


மேலும் படிக்க | போனில் மூழ்கிய சிறுவன்! உள்ளே நுழைந்த பாம்பு! அடுத்து என்ன நடந்தது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ