மாட்டு சாணியை ஜாம் போல தடவி சாப்பிடும் நபர்! பார்த்தாலே வாந்தி வருது..வைரல் வீடியோ

ஒரு இளைஞர், மாட்டு சாணியை சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், வாந்தி வருவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

Written by - Yuvashree | Last Updated : Oct 3, 2024, 07:47 PM IST
  • சாணியை சாப்பிடும் இளைஞர்
  • பார்த்தாலே வாந்தி வருது..
  • வைரல் வீடியோ..
மாட்டு சாணியை ஜாம் போல தடவி சாப்பிடும் நபர்! பார்த்தாலே வாந்தி வருது..வைரல் வீடியோ

கையில் இருக்கும் மொபைல் போனை வைத்து, சிலர் வீடியோ கிரியேட்டர் ஆகி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர், தான் வைரலாக வேண்டும் என்பதற்காகவே சில தேவையற்ற விஷயங்களை செய்து ட்ரோல் ஆவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர், வேண்டுமென்றே வெறுப்பேற்றும் செயல்களை செய்து வைரலாகி வருகின்றனர். அதை பார்க்கும் போது, ஒரு சிலருக்கு எரிச்சலும், ஒரு சிலருக்கு குமட்டலும் வரும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது.

Add Zee News as a Preferred Source

வைரலாகும் வாந்தி வரும் வீடியோ!

தற்போது மக்கள் மத்தியில் வைரலாகி வரும் வீடியோவில், ஒரு இளைஞர் ரோட்டில் கிடக்கும் சாணிக்கு அருகில் சென்று அமர்கிறார். கையில் ரொட்டியை வைத்துகொண்டிருக்கும் அவர், கொஞ்சம் கொஞ்சமாக அந்த ரொட்டியில் சாணியை ஜாம் போல தடவுகிறார். பின்னர் அதை அப்படியே எடுத்து வாயில் வைக்கிறார்.

அந்த இளைஞர், சாணியை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே வீடியோ முடிகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், சாணியை சாப்பிட்ட அதே வாயால் இவர் எப்படி வேறு எதையாவது சாப்பிடுவார்? என்று கேட்டு வருகின்றனர். 

குமட்டல்..

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல தங்களது கருத்துகளை கமண்ட் செக்‌ஷனில் தெரிவித்து இருக்கின்றனர். ஒரு சிலர், அந்த இளைஞர் சாணியை ஒரு புறம் தள்ளிவிட்டு வெறும் ரொட்டியை மட்டும் சாப்பிடுவதாக கூற, இன்னும் சிலர் இது கட் செய்யப்பட்ட எடிட் செய்த வீடியோவாக இருக்கலாம் என பேசி வருகின்றனர். எது எப்படி இருப்பினும், இந்த வாலிபரின் செயல் பலரை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

மேலும் படிக்க | சர்க்கஸ் கூடாரத்தில் நடந்த அதிர்ச்சி, வித்தை காட்டியவரை கடித்து குதறிய கரடி - வைரல் வீடியோ

மேலும் படிக்க | ஆற்று நீரில் கிங்ஃபிஷர் நடத்திய மீன் வேட்டை... வியந்து போன நெட்டிசன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News