கழுகு குஞ்சு பொரிக்கும் காட்சியை பார்த்திருக்கீங்களா? ரகசியமாக எடுத்த வீடியோ
Eagle Viral Video: பறவை இனத்திலேயே அதிக ஆயுட்காலம் வாழக்கூடியவை, அதிக உயரம் பறக்க கூடியவை என புகழப்படும் பறவைகளின் அரசன் கழுகு குஞ்சு பொரிக்கும் காட்சியை காணுங்கள்
வைரல் வீடியோ: இங்கிலாந்தில் வெள்ளை வால் கொண்ட காட்டு கழுகு குஞ்சு பொரிக்கும் நேரடி காட்சியை ரகசிய கேமரா படம்பிடித்தது. பறவைகள் பாதுகாப்புக்கான ராயல் சொசைட்டி (RSPB) அபெர்னாதி மையத்தின் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏப்ரல் 8, வெள்ளிக்கிழமை இரவு 7.43 மணிக்கு குஞ்சு பொரிக்கும் நேரலை காட்சிகளைப் பார்த்தனர். பறவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, கூடு கட்டும் இடம் பொதுமக்களுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டது. சமீபத்தில், RSPB ஸ்காட்லாந்து ஏப்ரல் 8 ஆம் தேதி 19.43 மணிக்கு கழுகுகள் முதல் முட்டை இட்டு குஞ்சு பொரித்ததை உறுதிப்படுத்தியது.
இரண்டு கழுகுகளும் பனி மற்றும் புயலில் இருந்து குஞ்சுகளை பாதுகாக்கும் காட்சிகள் காண கிடைக்காதவை. லோச் கார்டன் நேச்சர் சென்டரில் குஞ்சு பொரிக்கும் நேரடி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதை பதிவு செய்த கேமரா, கூட்டில் இருந்து மூன்று மீட்டர் தூரத்தில் ஒரு மர கிளையில் மறைத்து வைக்கப்பட்டது.
மேலும் படிக்க | Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!
வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
இங்கிலாந்தில் இது மாதிரியான வீடியோவை பதிவு செய்வது இதுவே முதல் முறை. முன்னதாக, எஸ்டோனியா மற்றும் லாட்வியாவில் குஞ்சு பொரிப்பது வெற்றிகரமாக ஆவணப்படுத்தப்பட்டது. ஆர்எஸ்பிபி ஸ்காட்லாந்தின் வருகையாளர் அனுபவ மேலாளர் ஃபெர்கஸ் கம்பெர்லேண்ட் கூறியதை மேற்கோள் காட்டி தி கார்டியன் வெளியிட்டுள்ள செய்தியில்: "கழுகு குஞ்சு பொரிப்பதைப் பார்ப்பது பொதுமக்களுக்கு ஒரு உற்சாகம். இந்தப் பறவைகளின் உண்மையான தன்மை மற்றும் ஆளுமையைப் பார்ப்பது மக்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். என் முன்னே இப்படியெல்லாம் நடப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது’ என அவர் கூறியதாக குறிப்பிட்டுள்ளது.
கம்பர்லேண்ட் இது குறித்து மேலும் கூறுகையில், 'இது நம்பமுடியாதது. இத்தகைய சிறப்புமிக்க தருணத்தை காண முடிந்ததை நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறோம். ‘வெள்ளை வால் கொண்ட கழுகு என்பது மிதமான யூரேசியாவில் பரவலாகக் காணப்படும் கடல் கழுகின் மிக முக்கிய இனமாகும். இந்த பறவைகள் 1918 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தில் அழிந்துவிட்டன. இருப்பினும், ஸ்காண்டிநேவிய கழுகு 1975 ஆம் ஆண்டு ஐல் ஆஃப் ரம்மில் மீண்டும் கண்டிபிடிக்கப்பட்டது’ என்றார்.
மேலும் படிக்க | Cobra Video: பின்னி பிணையும் நாக பாம்புகள்; இது காதலா இல்லை ஊடலா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR