சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணம் (Marriage) என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு நாளும் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம்.


பொதுவாக தன்னுடைய திருமணத்தில் தன்னுடைய வருகை ஒரு பிரம்மாண்டமான முறையில் இருக்க வேண்டும் என திருமணம் புரிந்துகொள்ளும் மணமகள் நினைப்பது வழக்கம். வெட்கப்பட்டு, குனிந்த தலையுடன் தான் மணமகள் வர வேண்டும் என்ற சிந்தனை பழங்கால சிந்தனையாகி விட்டது.


தற்போது மணம் புரியும் பெண்கள், வழக்கமான பாணியை புறக்கணித்து புதுப்புது விதங்களில் திருமண மண்டபத்துக்கு வரத்தொடங்கியுள்ளார்கள்.


மிகவும் மகிழ்ச்சியாக திருமண மண்டபத்துக்கு காரை ஓட்டிக்கொண்டு வரும் ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி (Viral Video) வருகின்றது.


பெரும்பாலான மணப்பெண்கள் பொதுவாக தங்கள் திருமண நாளுக்கு முன்னர் ஒரு வித மன அழுத்தத்துடன் இருப்பார்கள். ஆனால், இந்த பெண் படு கூலாக, அசால்டாக காரை ஓட்டிகொண்டு செல்வதைக் காண முடிகின்றது.


ALSO READ: Viral Video: ‘நான் தூங்க மாட்டேன்’ என அடம்பிடித்து கொட்ட கொட்ட விழித்திருக்கும் குட்டி யானை 


வைரல் வீடியோவில் காணப்படும் பெண் ஆக்ரிதி சேதி ஆவார். அவர் ஒரு சிவப்பு நிற லெஹங்காவில், திருமண நகைகளுடன் ஒரு இந்தி திருமண பாடலின் மெட்டுக்கு ஏற்றவாறு காரை ஓட்டிக்கொண்டு திருமண மண்டபத்துக்கு செல்கிறார்.


ஆக்ரிதியின் ஒப்பனை கலைஞர் பாருல் கர்க் இந்த வீடியோவைப் பகிர்ந்து, "திருமண மண்டபத்திற்கு செல்ல இந்த மணப்பெண்ணல் சிறிதும் காத்திருக்க முடியவில்லை. காரை தானே எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார்” என்று எழுதினார்.


வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ (Video) வைரலாகியுள்ளது. மேலும் மணமகளின் அழகான புன்னகையும் தொற்றிக்கொள்ளும் அளவில் இருக்கும் அவரது துடிதுடிப்பும் அனைவரையும் அதிகம் கவர்ந்துள்ளது. பல வழக்கமான முறைகளை உடைத்தெறிந்த அந்த பெண்ணை பலர் பாராட்டி உள்ளனர்.


கமெண்ட் பிரிவில் பலர் ஹார்ட் எமோஜிகளை நிரப்பியுள்ளனர். ஒரு பயனர் “அழகான மணமள்” என்றும் மற்றொருவர் “அற்புதம்” என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.


ALSO READ: Viral Video: 24 கேரட் தங்கபாகுபலி Momos; அசத்தும் மும்பை உணவகம்; விலை ₹1299 மட்டுமே..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR