மும்பை: தங்க பிரியாணி மற்றும் தங்க வடா பாவ் விற்பனைக்கு பிறகு, இப்போது தங்க மோமோக்களும் சந்தையில் வந்து விட்டன, ஆமாம், இந்தியாவில் மிகவும் விரும்பப்பட்ட தெருவோர உணவு வகைகளில் ஒன்று மோமோஸ் என்னும் ஸ்னேக்ஸ் வகை உணவு. மும்பையில் உள்ள ஒரு உணவகத்தில் 2 கிலோ எடையுள்ள, 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட மோமோஸ் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாகுபலி மோமோஸை 7-8 பேர் சாப்பிடலாம்.
இந்த விலை உயர்ந்த தங்க மோமோ சுவையான காய்கறிகள், பாலாடைக்கட்டி மற்றும் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட ஒரு அடுக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள மெஸ்ஸி அட்டா கஃபே தயாரித்த "இந்தியாவின் முதல் தங்க மோமோ" இது என்று கூறிய வாடிக்கையார் திஷா தங்க மோமோவின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பித்தளை பாத்திரத்தில் சிற்றுண்டி பரிமாறப்படுகிறது. மேலும் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விலை ரூ. 1,299 மட்டுமே.
ALSO READ | பதைபதைக்க வைக்கும் வீடியோ.; ஆற்றில் அடித்து செல்லப்படும் வீடு.!!
வீடியோவை இங்கே காணலாம்:
இதற்கு கருத்து தெரிவித்த சிலர் கண்டிப்பாக சாப்பிடுவோம்செய்வோம் என்று சொன்னாலும், மற்றவர்கள் இதனை நம்பவில்லை, சிலர் தங்கத்தின் சேர்க்கை சுவையில் எந்த வித வித்தியாசமும் இல்லை என்று கூறினர்.
ALSO READ | கழிப்பறையில் ‘திடீர்’ பிரசவம்; ‘உள்ளே’ விழுந்த சிசு இறந்த சோகம்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR