பீகார் மாநிலம் ஜமுய் என்ற இடத்தில் காவல் நிலையத்திற்கு நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என போலி சீருடை மற்றும் கை துப்பாக்கியுடன் வந்த 18 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். பின்பு விசாரணையில், தன்னை ஐபிஎஸ் அதிகாரி ஆக்குவதாக கூறி தன்னிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு இந்த சீருடையை வழங்கியதாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். அந்த சிறுவன், தான் அணிந்து இருப்பது போலியான சீருடை மற்றும் கைது துப்பாக்கி என்று தெரியாமல் ஐபிஎஸ் அதிகாரியை போல வேகமாக காவல் நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். 18 வயதான அந்த இளைஞரின் பெயர் மிதிலேஷ் குமார். அவரிடம் மனோஜ் சிங் என்ற நபர் ரூபாய் 2 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு விசித்திரமான முறையில் அவரை ஏமாற்றிய சம்பவம் அங்குள்ள காவல் துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: பிளாட் வெளியில் வைக்கப்பட்டிருந்த ஷூவை திருடும் ஸ்விக்கி டெலிவரி பாய்!


"தேடப்பட்டு வரும் மனோஜ்சிங் என்ற நபர் சிறுவன் மிதிலேஷ் குமாரை ஐபிஎஸ் அதிகாரி ஆக்குகிறேன் என்று நம்ப வைத்து அவரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு போலியான ஐபிஎஸ் அதிகாரியின் சீருடை மற்றும் கைது துப்பாக்கியை கொடுத்து காவல் நிலையம் செல்லும்படி அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காவல் நிலையத்திற்குள் வந்த சிறுவனை உடனடியாக அதிகாரிகள் கைது செய்தனர். ஐபிஎஸ் அதிகாரி போல் மாறுவேடம் விட்ட குற்றத்திற்காக அவரை கைது செய்து தற்போது விசாரணை செய்து வருகின்றார். இந்த வினோதமான சம்பவத்தின் வீடியோவை தேசிய குற்றப் புலனாய்வுப் பணியகம் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். மேலும் மிதிலேஷ் குமாரை ஜமுய்யில் உள்ள சிக்கந்தாரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 



"ஐபிஎஸ் ஐயா வாருங்கள்... எங்கள் சிக்கந்தரா காவல் நிலையத்திற்கு வாருங்கள்" என்று அந்த வீடியோவில் போலீஸ் அதிகாரி ஒருவர் கிண்டலாக சொல்வது தெரிகிறது. "பீகாரில் உள்ள ஜமுய் நகரில் 18 வயது சிறுவன் ஒருவர் யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெறாமல் ஐபிஎஸ் அதிகாரி ஆகியுள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்த போது, ​​‘நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி’ என்று தெரிவித்துள்ளார். அடுத்து என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள முழு வீடியோவைப் பாருங்கள்,” என்று NCIB தனது X பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, பலரும் அந்த சிறுவனை ஏமாற்றிய நபரை தேடி கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதே நேரத்தில் சிலர் அந்த சிறுவனின் அப்பாவித்தனத்தை பார்த்து கிண்டல் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | ரயில் ஏற வந்த பாம்பு... பிளாட்பாரத்தில் பதறி அடித்த ஓடிய பயணிகள் - திக் திக் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ