)
Viral Video Today: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெளியே வைக்கப்பட்டிருந்த ஒரு ஜோடி ஷூவை ஸ்விக்கியில் வேலை செய்யும் டெலிவரி ஏஜென்ட் ஒருவர் திருடி செல்லும் வீடியோ வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நொய்டாவில் செக்டார் 73ல் அமைந்துள்ள ஒரு வீட்டில் தான் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த டெலிவரி பாய் மேல் வீட்டில் உணவை டெலிவரி செய்துவிட்டு கீழே இறங்குகிறார். அப்போது படிக்கட்டுகளில் இறங்கி நடந்து வந்த அவர் ஷூக்களை திருடுகிறார்.
அங்கு ஒரு வீட்டின் வெளியில் நிறைய காலணிகள் இருப்பதை பார்க்கிறார். அதற்கு அடியில் ஒரு ஜோடி சாம்பல் நிற ஸ்னீக்கர்கள் இருப்பதை கண்டதும், அதனை வேகமாக தனது ஸ்விக்கி பைகளில் எடுத்து வைக்கிறார். அந்த வீட்டில் இருப்பவர்கள் ஷூ காணாமல் போனதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மூலம் திருடனை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, ஸ்விக்கி டெலிவரி ஏஜென்ட் என்று தெரிந்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஷூ திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, நொய்டாவில் உள்ள போலீசார் பிளாட்டில் உள்ள அந்த குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தங்களது விசாரணையை தொடங்கினர்.
फ्लैट के बाहर रखे जूते चोरी। Swiggy डिलीवरी बॉय की भी कोई मजबूरी रही होगी...
— Sachin Gupta (@SachinGuptaUP) September 17, 2024
नोएडा, उत्तर प्रदेश pic.twitter.com/bUTkC7nPeA
மேலும் இதில் சம்பந்தட்ட நபரை கைது செய்வோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, இணையவாசிகளிடம் பல கலவையான எதிர்வினைகளை பெற்றுள்ளது. ஒரு சிலர் அந்த ஸ்விக்கி டெலிவரி ஏஜென்டிற்கு ஆதரவாக பேசி உள்ளனர். இந்த திருட்டு சம்பவத்திற்கு பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் தான் காரணம் என்று பதிவிட்டுள்ளார். சிலர் அந்த நபர் செய்தது தவறு என்றும் சுட்டி காட்டியுள்ளனர். பொதுவாக பிளாட் போன்ற இடங்களில் வெளியாட்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இது போன்ற உணவு டெலிவரி செய்யும் நபர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், அவர்கள் இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ