பெங்களூரு பைதராயனபுராவில் உள்ள புகழ்பெற்ற காலி ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் காணிக்கை பணம் திருடப்படும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் கோயிலின் பக்தர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடையே வெறுப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையம் முழுவதும் வேகமாக பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கோவில் நன்கொடைகளை தவறான முறையில் கையாளும் நபர்களை இந்த வீடியோ வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. திருடப்பட்ட பணத்தை தந்திரமாக ஒரு நபர் பணத்தை மற்றவருக்கு கொடுக்கும் காட்சியில் இதில் இடம் பெற்றுள்ளது. இது கோவிலின் புனிதத்தையும் பக்தர்களின் மனப்பான்மையையும் வேதனையடைய செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரயிலில் ரொம்ப கூட்டம் இருந்தால்... இனி இதை செய்யுங்க - நிம்மதியா தூங்கிட்டு போகலாம் - வைரல் வீடியோ!


இச்சம்பவம், கோவில்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைக்கு பாதுகாப்பு இல்லாதது மற்றும் நம்பிக்கை இன்மையை அதிகரித்துள்ளது. வைரலாக வீடியோவில் ஒரு ஊழியர் கணிசமான அளவு பணத்தை எண்ணுவதைக் பார்க்க முடிகிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு, அதே நபர் மற்றொரு பண மூட்டையை எடுத்து மற்றொரு நபருக்கு கொடுப்பதை காணலாம், இது கோவில் பணத்தை தவறாக பயன்படுத்துவதைக் குறிக்கிறது. இச்சம்பவம் கோயிலின் நிர்வாக நடவடிக்கைகளில் ஊழலை எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய விரிவான கேள்விகளை எழுப்புகிறது. 



கோவில் நிர்வாகத்தில் வேண்டிய சீர்திருத்தம் மற்றும் மேற்பார்வையின் அவசியத்தைப் இந்த வீடியோ தூண்டியுள்ளது. இந்த வீடியோ X தளத்தில் 1.2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ பெங்களூரு பகுதியை தாண்டி உலகெங்கும் உள்ள பக்தர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு பயனர், “சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஊழல் பரவலாக இருப்பதாகத் தெரிகிறது" என்று பதிவிட்டுள்ளார். “பூசாரிகளும் இவர்களுடன் கைகோர்த்துக் கொள்கிறார்கள்” என்று இன்னொரு பயனர் பதிவிட்டுள்ளார். “கோயிவில் நிர்வாகத்தில் இருப்பவர்களும் இதில் உடந்தையாக இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தினார்கள்” என்று மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | நீர்நாயை பார்த்ததும் குஷியான வாகன ஓட்டிகள்! நீங்களும் சிரிப்பீங்க...வைரல் வீடியோ..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ