Train Viral Video: இந்தியாவில் பொது போக்குவரத்து என்பது சாமானியர்களுக்கான வரப்பிரசாதம் எனலாம். பேருந்து தொடங்கி புறநகர் ரயில், பயணிகள் ரயில் என மலிவு விலையில் கிடைக்கும் பல்வேறு போக்குவரத்து சேவைகளை மக்கள் அன்றாடம் பயன்படுத்துகின்றனர். அதிலும் வெளியூருக்குச் செல்வதில் சாமானிய மனிதர்களுக்கு பேருந்தை விட ரயில்தான் குறைந்த செலவில் கிடைக்கிறது எனலாம். அந்த வகையில், வார இறுதி நாள்கள், விடுமுறை நாள்கள், பண்டிகை நாள்கள் என்று வந்துவிட்டால் ரயில்களில் ஜன நெருக்கடி அதிகமாக இருக்கும்.
உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் இப்போது காலாண்டு தேர்வுகள் முடிந்துள்ளன. அடுத்த இரண்டு நாள்கள் வார இறுதி நாள்களாகும். அதேபோல் வரும் செவ்வாய்கிழமை அக். 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்று அரசு விடுமுறை ஆகும். இப்படி தொடர் விடுமுறைகள் காரணமாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை என தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவில் இருந்தே ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் சொந்த ஊருக்குத் திரும்ப மக்கள் குவிந்துவிடுவார்கள்.
சௌகரியமான ரயில் பயணம்
பேருந்து சேவை ஒருபுறம் இருக்க, ரயிலை எடுத்துக்கொண்டால் அதிலும் பல ஆப்ஷன்கள் பயணிகளுக்கு இருக்கும். வந்தே பாரத் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில், பாசஞ்சர் ரயில் என பல்வேறு ரயில்கள் இருந்தாலும் பொதுவாக ஏழை, எளிய மக்கள் முன்பதிவில்லாத பெட்டியில் பயணிக்கவே நினைப்பார்கள். மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பயணிக்க நினைப்பதால் அனைத்து ரயில்களும் நிரம்பி வழிவதை நாம் பார்த்திருப்போம். முன்பதிவில்லாத பெட்டி மட்டுமின்றி, சில பேர் இடம் கிடைக்காததால் முன்பதிவு பெட்டியில் ஏறி படியிலேயே உட்கார்ந்து வருவதையும் நாம் பார்த்திருப்போம்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த பிரச்னை இருக்கிறது. சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி இருக்கும் மக்களால் அதிக செலவு செய்து பயணிக்க முடியாது என்பதால் அவர்களுக்கு ரயிலே உகந்த சேவையாக இருக்கிறது எனலாம். இருந்தாலும் கால் வைக்க கூட இடமில்லாத நேரத்தில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். சுமார் 15 மணிநேர பயணத்தை நின்றுகொண்ட செல்லும் அவலத்தை இங்குதான் நாம் பார்க்க முடியும்.
'கூட்டத்தில் ஒருவன்'
அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் ரயிலில் கால் வைக்கவே இடமில்லாமல் மக்கள் நெருக்கடியுடன் நின்றுகொண்டே பயணிப்பதை காண முடிகிறது. 6 பேர் உட்கார வேண்டிய இருக்கையில் 8- 10 பேர், மேல் இருக்கையில் இருபுறம் சேர்த்து 6 பேர் என கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஆட்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் கூட்டம் குறைந்தபாடில்லை.
India me talent ki kami nhi hai.............
(@Chalbe__) September 25, 2024
இந்த சூழலில், அந்த ரயிலில் ஒருவர் தனக்கு தூங்குவதற்கு என தொட்டில் கட்டி அதில் பாதுகாப்பாக தூங்கும் வீடியோதான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ரயிலில் இரண்டு இருக்கைகளுக்கும் நடுவே இருக்கும் இடத்தில் நீண்ட தொட்டிலை கட்டி அதில் சௌகரியமாக தூங்குவதை வீடியோவில் காண முடிகிறது. இதை பார்க்கும் நெட்டிசன்கள் 'யாருயா இந்த ஐடியா மணி, செலவே இல்லாமல் கூட்டத்தின் நடுவே பெர்த்தில் நிம்மதியாக தூங்குகிறாரே' என பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ யாரால் எடுக்கப்பட்டது, எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து ஏதும் தெரியவில்லை. வட மாநிலங்களில் எடுக்கப்பட்டதாக தெரியும் இந்த வீடியோ ஒரு மீம் போன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ X தளத்தில் @Chalbe__ என்ற கணக்கில் இருந்து மீம் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை 15 லட்சத்தை தாண்டி வியூஸ் சென்றுவிட்டது எனலாம். அடுத்த முறை நீங்கள் குடும்பத்துடன் செல்கிறீர்கள் என்றால், சிறுவர்களை தூங்க வைக்க இந்த டெக்னிக்கை பெற்றோர் பின்பற்றலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ