பாலைவனத்தில் கானல்நீரா? இவ்வளவு அழகான பாலைவனத்தில் வாக்கிங் போனா எப்படி இருக்கும்? வைரல் வீடியோ!

Mirage In Desert Video Viral : தூரத்திலுள்ள பொருட்கள் தெளிவாக, நிலையாகத் தெரியாமல் அசைவது போல தோன்றுகிறது...  மாயத் தோற்றமா உண்மையா? வைரல் வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 25, 2024, 10:22 PM IST
  • மாயத் தோற்றமா உண்மையா? வைரல் வீடியோ
  • பாலைவனத்தில் கானல் நீர்
  • டிவிட்டர் எக்ஸ் வைரல் வீடியோ

Trending Photos

பாலைவனத்தில் கானல்நீரா? இவ்வளவு அழகான பாலைவனத்தில் வாக்கிங் போனா எப்படி இருக்கும்? வைரல் வீடியோ! title=

Video Viral :  நம் அன்றாட வாழ்க்கையில் மொபைல் நம்மோடு பின்னிப் பிணைந்து விட்டது என்றால், அதற்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி. மொபைலில் நாம் பார்க்கும் விஷயங்கள், நமது சிறிய உலகத்தை விரிவாக்கிவிட்டம. இன்று இணையம், செல்போன், ஸ்மார்ட்போன் இல்லாத உலகையே கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை என்பதுபோலவே, வீடியோவை பார்க்காத நாளும் இல்லை என்று சொல்லிவிடலாம்

வாழ்க்கையின் முக்கிய சாதனமாகிவிட்ட மொபைலில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பல செய்திகளை கொண்டு வந்து சேர்க்கின்றன. சமூக ஊடகங்கள், நமது வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்தி இயல்பாக்குகின்றன.

இணையத்தில் விரும்பி பார்க்கும் வீடியோக்களில் குரங்கும், பாம்பு, சிங்கம், புலி, யானை என காட்டு விலங்குகளின் வித்தியாசமான செயல்பாடுகள் இருந்தால், அந்த வீடியோக்கள் பகிரப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. ஆனால், இன்று நாம் பார்க்கப்போகும் வீடியோ வித்தியாசமானது.

மேலும் படிக்க | Viral Video: வகுப்பில் பாடம் படிக்க வந்த பாம்பு.... அலறி அடித்துக் கொண்டு ஓடிய மாணவர்கள்...

வைரலாகும் பாலைவன வீடியோ 

இந்த வீடியோவில் இயற்கையாக ஏற்படும் ஒளியின் இயல்பு ஆச்சரியமளிக்கிறது. கானல்நீர் என்ற வார்த்தயை நாம் அனைவரும் கேட்டிருக்கலாம். ஆனால், இவ்வளவு நெருக்கமாக சென்று பார்க்க முடியுமா என்றால் அனைவருக்கும் சந்தர்ப்பங்கள் வாய்க்காது. கடும் வெய்யில் காலங்களில் ஏற்படும் கானல்நீர் தோற்றம் அற்புதமாக இருக்கின்றன. பார்த்து ரசியுங்கள்...

சூரியனின் ஒளிக் கிரணங்கள் வளைந்து பயணிப்பதால் தூரத்திலுள்ள பொருட்கள் தெளிவாக, நிலையாகத் தெரியாமல் அசைவது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றன. பாலைவனங்களில் தூரத்திலிருந்து பார்த்தால் தண்ணீர் இருப்பதைப்போல் தோன்றும். ஆனால் அது உண்மையல்ல... மாயத் தோற்றமே!

இதேபோலத் தான், கடும் கோடையில் தார்ச் சாலைகளில் சற்று தூரத்தில் நீர் இருப்பதைப்போல மாயத் தோற்றம் உருவாவதை பார்த்திருக்கலாம். ஆனால், இந்த பாலைவனத்தின் கானல் நீர் பார்ப்பதற்கு ஆச்சரியம் அளிக்கிறது. கோடைக்காத்தில் தோன்றும் பொய்யான நீர் தான் கானல்நீர்.

கானல்நீர் என்னும் சொல் பொய்யான நம்பிக்கை அல்லது நிறைவேற்ற முடியாத செயல் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பாலைவனத்தில் கானல்நீர் வீடியோ சமூக ஊடகங்களில். வைரலாகிறது. 

பொதுவாக நாம் பார்த்துவிடவே முடியாத பல நிகழ்வுகளை இணையத்தில் வீடியோக்களாக பார்த்து ரசிக்கலாம். பலருக்கும் பிடித்திருந்தால் தொடர்ந்து பகிரப்பட்டு அது வைரலாகிறது. வைரலாகும் எல்லா வீடியோக்களுக்கும் உண்மையாவையா என்றால் அது கேள்விக்குறி தான். அதே சந்தேகம் இங்கும் வருகிறது. ஆனால், இந்த வீடியோ உண்மையானது தான்.

மேலும் படிக்க | கோபக்கார சிங்கத்தின் அப்பாவி முகம்! இவ்வளவு அப்பாவியா இருந்தா சிங்கம் மேல இருக்க பயமே போயிடும்! வைரல் வீடியோ...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News