நீர்நாயை பார்த்ததும் குஷியான வாகன ஓட்டிகள்! நீங்களும் சிரிப்பீங்க...வைரல் வீடியோ..!

காரில் இருந்து எட்டிப்பார்த்த நீர் நாய் குட்டி..வாகன ஓட்டிகளின் ரியாக்ஷன்..வைரல் வீடியோ..  

Written by - Yuvashree | Last Updated : Sep 27, 2024, 06:38 PM IST
  • க்யூட்டான நீர்நாய்
  • பார்த்தவர்களின் ரியாக்‌ஷன்
  • வைரல் வீடியோ!!
நீர்நாயை பார்த்ததும் குஷியான வாகன ஓட்டிகள்! நீங்களும் சிரிப்பீங்க...வைரல் வீடியோ..! title=

நீர்நாய் ஒன்று, காருக்குள் இருந்து கொண்டு வாகன ஓட்டிகளை எட்டிப்பார்க்கும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த டிஜிட்டல் உலகில், அகில பிரபஞ்சமே நமது கைக்குள் அடங்கி விட்டது. இதனால், எங்கு நடக்கும் விஷயங்களையும் நொடிக்குள் பார்த்து விடலாம். பல சமயங்களில், நாம் அழும் தருவாயில் இருக்கும் போது கூட ஏதேனும் ஒரு வீடியோவை பார்ததால் உடனே சிரிப்பு வந்து விடும். அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ:

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், டிராஃபிக்கிள் கார் நிற்கிறது. முதலில் இரு சக்கர வாகனத்தில் தனது தந்தையுடன் சிறுவன் வந்து நிற்கிறான். அப்போது காரின் கண்ணாடியை கீழிறக்க, க்யூட்டான நீர்நாய் எட்டி பார்க்கிறது. அப்போது, அந்த சிறுவன் மனம் பூரிக்க சிரிக்கிறான். 

சிறுவனை தொடர்ந்து, இன்னும் சிலரும் அந்த நீர்நாயை பார்த்து க்யூட்டாக சிரிக்கின்றனர். இப்படியே பலர் அதை பார்த்து சிரிக்கின்றனர். இந்த வீடியோ, தற்போது வரை 13 ஆயிரம் லைக்ஸ்களை பெற்று இருக்கிறது. 1.4 ஆயிரம் பேர் வரை ஷேர் செய்திருக்கின்றனர். 

மேலும் படிக்க |  மலைப்பாம்பை டம்மி பீஸ் ஆக்கி சவாரி செய்யும் குட்டீஸ்: ஷாக் ஆன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

நீர்நாய்கள்:

  • நீர்நாய்கள், அடர்த்தியான ரோமம் கொண்ட மிருகங்களுள் ஒன்றாகும். இதனால் இவை எப்பேற்பட்ட குளிரான இடங்களிலும் வாழுமாம்.
  • பிற மிருகங்களை போல அல்லாமல், இந்த மிருகங்களுக்கு கையில் இருக்கும் கல்லை எப்படி  உபயோகிக்க வேண்டும் என்று தெரியுமாம். 
  • இவை, தனக்கு பிடித்த கல்லை தனக்கு அருகிலேயே வைத்துக்கொள்ளுமாம்.
  • நீர்நாய்கள், கூட்டமாக மட்டுமே வாழுமாம். ஒரு க்ரூப்பில் சுமார் 20 நீர்நாய்கள் வரை இருக்குமாம். 
  • கடலில் இருக்கும் முக்கியமான மிருகங்களுள் ஒன்று நீர்நாய்கள்.
  • நீர்நாய்கள் மீன் மற்றும் ஆக்டோபஸ் ஆகியவற்றை சாப்பிடுமாம். தனது உடல் எடையில் 25 சதவிகிதம் இவை சாப்பிடும் உணவுதான் இருக்குமாம். d

மேலும் படிக்க | ரயிலில் ரொம்ப கூட்டம் இருந்தால்... இனி இதை செய்யுங்க - நிம்மதியா தூங்கிட்டு போகலாம் - வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News