புதுடெல்லி: தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது முறையாக சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) கோப்பையை வென்றனர். இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக, அந்த அணி கோலிவுட் பிளாக்பஸ்டர் படமான மாஸ்டரின் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடி பட்டையைக் கிளப்பிய வீடியோ வைரலாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள இந்த வீடியோ கிளிப்பில், கார்த்திக் மற்றும் அவரது தோழர்கள் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு அசத்தலான முறையில் நடனமாடுவதைக் காண முடிகிறது. மேலும் நடிகர் விஜய்யின் (Vijay) முக்கிய ஸ்டெப்பை தினேஷ் கார்த்திக் மிக நேர்த்தியாக செய்வதையும காண முடிகிறது. அவரது தோழர்கள் அவர் செய்வது போலவே பின்தொடர்வது காண்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.



“வாத்தி கம்மிங்” பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் கானா பாலச்சந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். மேலும் இப்பாடலின் வீடியோ YouTube-ல் 15 மில்லியன் வியூசைப் பெற்றுள்ளது.


தமிழக அணியின் புகழ்பெற்ற வெற்றிக்கு பின்னர், தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik) தனது ட்விட்டர் பக்கத்தில், “இதைவிட பெரிய ஒன்றுக்கு நாங்கள் ஆசைப்பட்டிருக்க முடியாது. மீண்டும் ஒரு கைதட்டல்!! இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. அனைவரும் மிகவும் நன்றாக விளையாடினார்கள். இது முழுக்க முழுக்க கூட்டு முயற்சிக்கு கிடைத்த ஒரு வெற்றி” என்று எழுதினார்.


ALSO READ: Anushka, Virat குழந்தையின் பெயர் என்ன தெரியுமா? புகைப்படம் இதோ…



மாஸ்டர் (Master) திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. குற்ற செயல்களுக்கு சிறுவர்களை பயன்படுத்தும் ஒரு ரௌடிக்கும் ஒரு பேராசிரியருக்கும் இடையில் நடக்கும் சண்டைகளும் மோதல்களும்தான் இதன் கதைக்களம். இப்படம் ஜனவரி 29 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.



தற்போது இப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு தினேஷ் கார்த்திக் மற்றும் அவரது அணி ஆடியுள்ள நடனம் படு வைரலாகி (Viral) வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.


ALSO READ:  Kieron Pollard நல்லாதான் இருக்காரு: Viral ஆன ‘Kieron Pollard Death’ செய்தி, வெறியான fans


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR