பள்ளி மாணவியின் ஆடைகளை கிழித்து அடித்து உதைத்து தாக்கும் வீடியோ வைரல்!
Girls Student Fight Video: போதைப்பொருள் உட்கொள்ள மறுத்த மாணவியை கடுமையாகத் தாக்கிய சித்ரவதை செய்த சக மாணவிகள். சமூக வலைதளங்களில் வைரலாகும் மாணவிகள் சண்டை வீடியோ.
டிரெண்டிங் வீடியோ: பாகிஸ்தானின் தலைநகர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி போதைப்பொருள் உட்கொள்ள மறுத்ததற்காக தங்கள் வகுப்பு தோழியை தாக்கும் மற்ற சில சகமாணவிகள். மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் நான்கு மாணவிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஜனவரி 16 அன்று, லாகூர் பாதுகாப்பு வீட்டு வசதி ஆணையத்தில் (டிஹெச்ஏ) உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் நிகழ்ந்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
பள்ளி நாட்கள் மிக அழகான நாட்கள். இக்காலத்தில் கல்வியோடு வாழ்வில் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறோம். விளையாட்டு, அரசியல், கலாச்சார நிகழ்ச்சிகள், ஓவியம் என பல விஷயங்கள் கற்பிக்கப்படுகின்றன. பள்ளி கலாச்சார நிகழ்ச்சி குறித்து பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன. அதேநேரம் பெண் மாணவிகள் சண்டையிடும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. தற்போது பள்ளி மாணவிகள் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சண்டைக்கான காரணத்தை அறிந்த பிறகு, நீங்கள் நிச்சயமாக அதிர்ச்சியடைவீர்கள்.
மேலும் படிக்க: அட கடவுளே..பள்ளி படிக்கும் மாணவர்கள் இப்படியா செய்றது..வீடியோ வைரல்
மாணவிகள் சண்டை வீடியோ டிரெண்டிங்
ரேபிட் பாகிஸ்தான் என்ற ட்விட்டர் ஹேண்டில், சில இளம் மாணவிகள் தங்கள் வகுப்பு சகத்தோழியை தாக்கும் வைரலான வீடியோவை ட்வீட் செய்துள்ளது. வைரலாகி வரும் வீடியோவில், மூன்று மாணவிகள் தங்கள் வகுப்பு தோழியை கீழே தள்ளி தரையில் படுக்க வைத்து அடிப்பதை நீங்கள் காணலாம். அந்தப் பெண்ணின் மீது ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். சிறிது நேரத்தில் இன்னொரு பெண்ணும் வந்து அந்த பெண்ணின் கால்கள் மீது அமர்ந்தாள். கீழே இருக்கும் மாணவி எழுந்திருக்க முயற்சி செய்கிறார். ஆனால் இருவரும் அவள் உடலை விட்டு எழுந்திருக்கவில்லை. அதேநேரத்தில், அதிர்ச்சியாக, அங்கு நின்ற மூன்றாவது மாணவி பாதிக்கப்பட்ட மாணவியின் தலையில் உதைத்கிறாள். மேலே அமர்ந்திருக்கும் பெண், பாதிக்கப்பட்ட மாணவியின் தலையை பிடித்து ஓங்கி அடிக்கிறாள். மூன்று பேரும் பாதிக்கப்பட்ட மாணவியை தாக்குகிறார்கள். இந்த சம்பவத்தை மற்ற மாணவி வீடியோ எடுத்து வருகிறார். போதைப்பொருள் உட்கொள்ள மறுத்ததற்காக பள்ளி மாணவிகள் வகுப்பு தோழியை அடிக்கும் டிரெண்டிங் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
மேலும் படிக்க: வகுப்பறையில் இப்படியா செய்றது..மாணவ - மாணவியின் வைரல் வீடியோ
போதைப்பொருள் உட்கொள்ள மறுத்ததால் தாக்குதல்
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இம்ரான் யூனி சம்பவம் குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். போதைப்பொருள் உட்கொள்ள மறுத்ததால் மூன்று மாணவிகளும் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மூன்று மாணவிகளில் ஒருவர் குத்துச்சண்டை வீரர். இந்த தாக்குதலில், பாதிக்கப்பட்ட மாணவியின் முகம் மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் போதைபொருள்
லாகூரில் போதைப்பொருள் பயன்பாடு தனியார் அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆபத்தான முறையில் அதிகரித்துள்ளது என்று போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் முதலமைச்சரின் ஆலோசகரான சுல்பிகார் ஷா தெரிவித்துள்ளார். லாகூர் நகரில் கடந்த ஆண்டு 9,000க்கும் மேற்பட்ட போதைப்பொருள் வியாபாரிகள் போலிசாரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க: வகுப்பறையில் செய்ய வேண்டிய செயலா இது, மாணவர்களின் வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ