சீண்டிய பெண்ணை வெச்சி செஞ்ச குரங்கு: ‘இது தேவையா’.. கேட்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Funny Monkey Video: தேவை இல்லாமல் குரங்கை சீண்டி சிக்கித் தவிக்கும் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்தால் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 23, 2023, 01:23 PM IST
  • சிங்கம், புலி, குரங்கு, பாம்பு ஆகிய விலங்குகளின் வீடியோக்கள் பெரும்பாலும் இணையத்தில் அதிகம் வைரலாகின்றன.
  • சமூக ஊடகங்களில் இவற்றின் வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகின்றன.
  • குரங்குகளின் குறும்புத்தனமும், எதிர்பாராமல் அவை செய்யும் செயல்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
சீண்டிய பெண்ணை வெச்சி செஞ்ச குரங்கு: ‘இது தேவையா’.. கேட்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சிங்கம், புலி, குரங்கு, பாம்பு ஆகிய விலங்குகளின் வீடியோக்கள் பெரும்பாலும் இணையத்தில் அதிகம் வைரலாகின்றன. சமூக ஊடகங்களில் இவற்றின் வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகின்றன. குரங்குகளின் குறும்புத்தனமும், எதிர்பாராமல் அவை செய்யும் செயல்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. 

அப்படி ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில், மொட்டை மாடியில் ஒரு பெண்ணுக்கும் குரங்குக்கும் இடையில் நடக்கும் சம்பவம் பற்றி காண முடிகின்றது. ஒரு குரங்கு ஒரு வீட்டின் மொட்டை மாடியில் தன் பாட்டுக்கு அமர்ந்திருக்கிறது. அப்போது அந்த குரங்கிடம் ஒரு பெண் வம்பு செய்கிறார். அதை சீண்டுகிறார். ஆனால், அவருக்கு அந்த குரங்கு சரியான பாடம் கற்பிக்கிறது. 

இந்த வீடியோவை பார்த்தால் சிரிப்பும் வருகிறது. அதே சமயம் இந்த பெண் ஏன் இப்படி செய்ய வேண்டும்? குரங்கு அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருந்தால் என்ன செய்வது என்ற கேள்வியும் வருகிறது. 

மேலும் படிக்க | என்ன ஒரு புத்திசாலித்தனம்...அதிர வைக்கும் பாம்பு: வீடியோ வைரல் 

குரங்கை சீண்டி சிக்கிக்கொண்ட பெண் 

சில வினாடிகளே கொண்ட இந்த வீடியோவில் ஒரு குரங்கு மொட்டை மாடியில் மிக அமைதியாக வெயிலில் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அப்போது ஒரு பெண் அங்கு வருகிறார். குரங்கை சீண்டும் வகையில் பெண் ஸ்டைல் காட்டுகிறார். இரு கைகள் காட்டி அதை வம்புக்கு இழுக்கிறார். ஆனால், அந்த பெண்ணின் இந்த செயல் குரங்குக்கு பிடிக்கவில்லை. அது பெண்ணுக்கு கடுமையான பாடத்தை புகட்டுகிறது.

பெண்ணின் செயலால் கடுப்பான குரங்கு தன் இடத்தில் எழுந்து நின்று அந்த பெண்ணின் பின்னால் ஓடத் தொடங்குகிறது. குரங்கு தன் பக்கம் வருவதை பார்த்த பெண் ஆடிப்போகிறார். அவர் உன்னைப்பிடி என்னைபிடி என ஓடத் தொடங்குகிறார்.

பெண்ணை வெச்சி செஞ்ச குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by FunTaap Official (@funtaap)

சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் இந்த வேடிக்கையான வீடியோ இடம்பெற்றுள்ளது. இது இன்ஸ்டார்கிராமில் funtaap என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய பாகிஸ்தான் பெண்... வாயை பிளக்கும் நெட்டிசன்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News