தனி உலகமாக மாறிப்போன இணையத்திற்குள் தான் பலரது வாழ்க்கையும் மூழ்கியுள்ளது, அந்த உலகிற்குள் நாம் சென்றுவிட்டால் நம்மால் அவ்வளவு எளிதாக அதைவிட்டு திரும்பி வந்துவிட முடியாது.  ஏனெனில் அந்த அளவிற்கு இணைய உலகத்தில் நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடிய வகையில் பலவித அதிசயங்கள் நிரம்பி கிடக்கின்றது.  அனுதினமும் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலும், நம்மை வியக்கவைக்கும் வகையிலும், நம் சிந்தனையை தூண்டும் வகையிலும், நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் பல விஷயங்கள் இணையத்தில் உலா வந்துகொண்டே இருக்கின்றது.  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என பல வகையில் நமது மனதை ஈர்க்கும் வகையில் சுவாரஸ்யமான விஷயங்கள் இணையத்தில் அதிகளவில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: ஸ்ப்ப்பா முடியலை... என்ன விடுடா... குட்டி யானையுடன் போராடும் இளைஞர்!


இப்போதும் நம்மை மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய விதமாக இணையத்தில் ஒரு காட்சி பகிரப்பட்டு இருக்கிறது, அதில் முயல் செய்யும் சேட்டை நம்மை ஈர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.  மின்னல் வேகத்தில் ஓடுவதில் கில்லாடி முயல் என்று நம் அனைவருக்கும் தெரியும். முயல் ஓடுவது, சாப்பிடுவது போன்ற சாதாரணமான செயல்களை கண்டால் நாம் ஆச்சர்யமாக பாப்போம். தற்போது இந்த வீடியோவில் முயல் செய்யும் செயல் ரசிக்கவைக்கிறது.  ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது, அந்த வீடியோவில் ஒரு முயல்குட்டி மெத்தையின் மீது அமர்ந்து ஒரு பெரிய போர்வையை தனது வாயால் கவ்வி அதனை ஒருவழியாக இழுத்து தன்மீது போர்த்திக்கொண்டு படுக்க முயற்சி செய்கிறது.


 



ஒருவழியாக அந்த முயல் வெற்றிகரமாக போர்வையை போற்றிக்கொண்டு படுத்துவிடுகிறது, இந்தக்கட்சியை இணையத்தில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்திருக்கின்றனர்.  மேலும் இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பலரும் லைக் செய்தும், கமெண்டு செய்தும் வருகின்றனர்.  இந்த வீடியோ தற்போது உள்ள வானிலை நிலவரத்தை நினைவு படுத்தும் வகையிலும் உள்ளது.


மேலும் படிக்க | அம்மானா சும்மாவா: பாம்பை பதம் பார்த்த கோழி, ஆச்சரியத்தில் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ