அம்மானா சும்மாவா: பாம்பை பதம் பார்த்த கோழி, ஆச்சரியத்தில் நெட்டிசன்கள், வைரல் வீடியோ

Scary Viral Video: இதை பார்த்தால் நம்ப முடியாது!! ராஜ நாகம் போன்ற ஆபத்தான பாம்பு கோழிக்கு அடிபணிவதை காட்டும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 19, 2022, 05:54 PM IST
  • கோழி குஞ்சுகள் அருகே செல்லும் ராஜ நாகம்.
  • குழந்தைகளைக் காப்பாற்ற, பாம்புடன் சண்டையிடும் கோழி.
  • வைரலாகும் விடியோ.
அம்மானா சும்மாவா: பாம்பை பதம் பார்த்த கோழி, ஆச்சரியத்தில் நெட்டிசன்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் பாம்புகள் தொடர்பான பல வீடியோக்களை நாம் அடிக்கடி காண்கிறோம். பாம்புகள் பிற மிருகங்களையும் மனிதர்களையும் தாக்குவதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், பாம்பு தாக்கப்படும் வீடியோக்கள் மிகக்குறைவே. அப்படிப்பட்ட நிகழ்வுகளும் மிக குறைவாகவே நடக்கின்றன. ராஜ நாகம் போன்ற ஆபத்தான பாம்பு கோழிக்கு அடிபணிவதை காட்டும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

சிலிர்க்க வைக்கும் வீடியோ: 

குழந்தைகளுக்கு  ஒரு ஆபத்து என்றால், தாய் தன் உயிரைக் கொடுக்கவும் தயாராகிறார். இதற்கு இந்த வீடியோ சாட்சியாக அமைகிறது. இந்த வீடியோவில், கோழி குஞ்சுகள் அருகே ராஜ நாகம் ஒன்று வருவதை முதலில் காண்கிறோம். இதைக் கண்ட கோழி வேகமாக வந்து தன் குழந்தைகளைக் காப்பாற்ற, பாம்புடன் சண்டையிடத் தொடங்குகிறது. குழந்தைகளின் கேடயமாக அது நிற்கிறது. 

மேலும் படிக்க | வாவ்..இந்த கலர் ல கூட பாம்பு இருக்கா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ 

பாம்பை பாடாய் படுத்திய கோழியின் வீடியோவை இங்கே காணலாம்:

பாம்பை தாக்கிய கோழி

கோழிக்குஞ்சுகள் ஆபத்தில் இருப்பதைக் கண்டவுடன், கோழி விரைவாக வந்து பாம்பை எதிர்கொள்கிறது. தன் குழந்தைகளை காப்பாற்ற, கோழி தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாம்புடன் சண்டை இடுகிறது. ஆபத்தான ராஜ நாகத்தை கோழி பாடாய் படுத்தி இறுதியில் வெற்றி காண்பதைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். இறுதியில், ஒரு தாய்க்கு வெற்றி கிடைக்கிறது. பாம்பு தன் வாலை சுருட்டிக்கொண்டு ஓடத் தயாராகிறது. 

வீடியோ வைரலானது

இந்த வீடியோ சமூக வலைதளமான ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலராலும் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. வெறும் 51 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை 1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் (சமூக ஊடக பயனர்கள்) பார்த்துள்ளனர். இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். இணையவாசிகளும் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

‘தாயின் பாசம் நிகரற்றது’ என ஒருவர் எழுதியுள்ளார். ‘தாய் பாசத்துக்கு முன்னால் பாம்பாலும் ஒன்றும் செய்ய முடியாது’ என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் படிக்க | சீண்டிய நபரின் கைகளை பதம் பார்த்த பாம்பு: பதற வைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News