Viral Video: ஆமைகளுக்கு ஆபத்தான டிரைவராக மாறிய ஹிப்போபொட்டாமஸ் சவாரி
நீர்யானையின் மீது சவாரி செய்யும் ஆமைக் கூட்டத்தின் பரிதாப நிலைமை…
சவாரிகள் பலவிதப்படும். வாகன சாவரி மட்டுமல்ல, வீட்டில் குழந்தைகளை உப்பு மூட்டை சுமக்கும் பெரியவர்களின் குதூகலமான சவாரி முதல், கடற்கரைக்குச் சென்றால், குதிரைச் சவாரி செய்வது என்ப பலவிதமான சவாரிகளை பார்த்திருக்கலாம்.
சமூக ஊடகங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்கள் வைரலாவது அதிகரித்துள்ளது. இயற்கை எழில்சூழ் இடங்களும், அங்குள்ள மிருகங்களின் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகின்றன. பொதுவாக அவை ஆபத்தானவை அல்ல, ரசிக்க வைப்பவை.
சமீபத்தில், இது போன்ற மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. அதில் விலங்குகளின் மீது சவாரி செய்வது பறவைகள் அல்ல. ஆமைக் கூட்டம்… ஆமைகளின் கூட்டம், நீர்யானை (Hippopotamus) மீது அமர்ந்து சவாரி செய்வதைக் காணலாம். ஆமைகள் (turtles) நீர்யானைகள் மீது அமர்ந்துள்ளன.
READ ALSO | Samudrika Shastra: மறைந்திருக்கும் ரகசியங்களை சொல்லும் பெண்களின் வயிறு
இந்த ரசிக்கத்தக்க 28 வினாடி காணொளியை இந்திய வன சேவை அதிகாரி சுதா ராமன் மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது பலரால் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
நீர்யானையின் மீது கூட்டமாக அமர்ந்திருக்கும் ஆமைகளில் தொடங்கும் வீடியோ, இறுதியில் சில ஆமைகளுடன் முடிகிறது. ஆனந்தமாக நீர்யானையின் மீது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆமைகள், ஹிப்போவின் திடீர் நகர்வால் தடுமாறி தண்ணீருக்கும் விழுந்துவிட்டன. ஹிப்போவின் நகரலும், ஆமைகளின் சரிவும் சில நொடிகளில் நடைபெறுகின்றன.
வீடியோவின் முடிவில் ஹிப்போபொட்டாமஸின் முதுகில் சில ஆமைகள் மட்டுமே மீதமிருப்பதை காணமுடிகிறது. அந்த வீடியோவில், "சில நேரங்களில் இலவச சவாரிகள் அபாயகரமானதாக இருக்கும்" என்ற வாசகங்களுடன் வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் குதூகலப்படும் நெட்டிசன்கள், அழகான பதிவுகள் மற்றும் தலைப்புகளுடன் வீடியோவை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். பலர் இதை இயற்கையின் அழகின் ஒரு பகுதி என்று சிலாகிக்கின்றனர். இந்த வாகனமும் ஆபத்தானது, வாகனமே ஓட்டுநராக மாறிவிட்டதே என்றும் நகைச்சுவையாக பதிவிடுகின்றனர்.
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாலூட்டியான நீர்யானை ஒரு தாவர உண்ணி ஆகும். கூட்டங்களாக வாழும் இவற்றின் ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும். 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழும் நீர்யானைகள் 3.5 மீட்டர் நீளமானவை; 1.5 மீட்டர் உயரமானவை. 1500 முதல் 3200 கிலோகிராம் எடை கொண்டவை.
நீர்யானைகளில் பெண் யானைகள் ஆண்களைவிட சிறியவை. தன்னுடைய இடத்திற்குள் யாராவது வந்தால் அவர்களை மூர்க்கமாகத் தாக்கக் கூடியவை.
READ ALSO | 21 வயதானால் மேலாடை அணியாமல் விருந்து கொடுத்து கன்னித்தன்மையை நிரூபிக்கும் கலாசாரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR