virginity party: 21 வயதானால் மேலாடை அணியாமல் விருந்து கொடுத்து கன்னித்தன்மையை நிரூபிக்கும் கலாசாரம்

பெண்ணின் கன்னித்தன்மையை போற்றும் வண்ணம் அவரது 21வது வயதில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். அதில் அந்த பெண் கன்னியா இல்லையா என்பதை ஒரு விலங்கு முடிவு செய்யும்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 19, 2021, 09:12 PM IST
  • 21 வயதானால் பெண் கன்னித்தன்மை விருந்து கொடுக்கும் கலாசாரம்
  • மேலாடை அணியாமல் விருந்து கொடுப்பார்
  • பிரத்யேகமான முறையில் கன்னித்தன்மை கணக்கிடப்படும்
virginity party: 21 வயதானால் மேலாடை அணியாமல் விருந்து கொடுத்து கன்னித்தன்மையை நிரூபிக்கும் கலாசாரம் title=

ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறுவிதமான சடங்குகளும் சம்பிரதாயங்களும் உண்டு. கலாசாரமும் இடத்து இடம் வேறுபடும். ஓரிடத்தில் கட்டாயமானது மற்றொரு இடத்தில் கேலிக்குரியதாக இருக்கும்.

இந்தியாவில் ஆபாசமாக கருதப்படும் ஒரு விஷயம், மேற்கத்திய நாடுகளில் இயல்பானதாக இருக்கலாம். எது எப்படியிருந்தாலும் சரி, ஒரு பெண்ணுக்கு 21 வயதானால், கன்னித்தன்மை (virginity) விருந்து கொடுப்பது கட்டாயம் என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இது மிகவும் சாதாரணமான விஷயம் தான். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் கொண்டாடுவதும், விருந்து கொடுப்பதும் சகஜம் தானே என்று நினைக்கலாம். ஆனால் பிறந்தநாள் கொண்டாடும் பெண், தன் உடலின் மேற்புறத்தில், ‘பிறந்தமேனி”யாக இருக்க வேண்டும். அதாவது மார்பகங்களை மறைக்கும் மேலாடைகளை போடாமல் தான் விருந்து கொடுக்க வேண்டும்.

ALSO READ:  Destination Wedding! தண்ணீர் சாட்சியாக நடைபெறும் திருமணத்தின் வீடியோ வைரல்

இது ஆப்பிரிக்க நாடு ஒன்றின் பழக்கம். இந்த டாப்லெஸ் விருந்து மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜூலு பழங்குடியினர் (Zulu tribe), பாரம்பரியமாக இந்த நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர். தென்னாப்பிரிக்காவின் ஜூலு பழங்குடியினருக்கு உமேமுலோ (unique tradition named Umemulo) என்ற தனித்துவமான பாரம்பரியம் உள்ளது.

பல தசாப்த காலமாக தொடரும் இந்த பாரம்பரியத்தில், பெண் தனது கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டும். இதற்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்படும். பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால், இந்த சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படும். கொண்டாடப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவின் ஜூலு பழங்குடியினரில், பெண் 21 வயது வரை கன்னியாக இருப்பது கட்டாயமாகும். பெண்ணுக்கு 21 வயதாகும்போது, குடும்பம் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறது. இதில், பெண்ணின் கன்னித்தன்மைக்கு மதிப்பு கொடுக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அந்தப் பெண் இன்னும் கன்னியாக இருக்கிரார் என்பதை முழு குடும்பமும் கொண்டாடுகிறது.

ALSO READ: "மெல்ல மெல்ல வரலாற்றில் காணாமல் போவோம்” : ஆப்கான் பெண்ணின் உருக்கமான வீடியோ

இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு, 21 வயதான இளம்பெண்ணின், உற்றார் உறவினர்கள் அழைக்கப்படுகின்றனர். விருந்து தொடங்குவதற்கு முன், அந்தப் பெண்ணின் கன்னித்தன்மையை போற்றும் வண்ணம் விலங்கு ஒன்று பலியிடப்படுகிறது, பிறகு பலியிடப்பட்ட விலங்கின் கொழுப்பைக் கொண்டு இளம்பெண்ணின் ஆடையில்லா பகுதி மறைக்கப்படும். இந்த விருந்தில் கலந்துக் கொள்ளும் அனைவரும், பெண்ணுக்கு பலரும் பரிசுகளைக் கொடுப்பார்கள்.
 
Vice India பத்திரிகையில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில், இந்த பாரம்பரியத்தை பின்பற்றியதாக ஜூலு பழங்குடியின பெண் தெம்பேலா (Thembela) கூறினார். 21 வயதை எட்டுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே அவரது குடும்ப உறுப்பினர்கள் இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். தெம்பேலா கன்னியா இல்லையா என்பதை அவரது தாய் உறுதிப்படுத்தினார். 
பாரம்பரிய வழக்கப்படி, மேலாடையின்றி நிற்க வைக்கப்படும் இளம்பெண்ணின் உடலின் மீது மாட்டின் கொழுப்பு போடப்படும். அப்போது அந்த கொழுப்பு வெடித்தால், அந்த பெண் கன்னித்தன்மையுடன் இல்லை, ஆனால் பொய் சொல்கிறாள் என்று அர்த்தம் என்று தெம்பேலா தெரிவித்தார்.

உமேமுலோ பாரம்பரியத்தில், ஜூலு இனத்தை சேர்ந்த பெண், வாழ்வின் அடுத்தக்கட்டத்தை அடைவதற்கான நிகழ்வு இது. இந்த பழமையான நடைமுறையில், பெண் தங்களது இன பாரம்பரியத்தைப் பின்பற்றி திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளாமல் இருந்ததற்காக பரிசுகள் வழங்கப்படுகிறது. தங்கள் மகள் 21 வயது வரை கன்னியாக இருப்பதில் குடும்ப உறுப்பினர்கள் பெருமை கொள்கிறார்கள்.

ஜூலு கலாச்சாரத்தில்  திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது தவறாக கருதப்படுகிறது. இருப்பினும், இப்போது உடலுறவு குறித்த பெண்களின் சிந்தனை மாறி வருகிறது. ஆண்களுக்கு இதுபோன்ற நடைமுறை இல்லாததால் பல பெண்கள் இதை சமத்துவமின்மையின் அடையாளமாக கருதுகின்றனர். விதிகள் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன.

Also Read | 'கண்ணுக்கு தெரியாத சக்தியால்' மனிதன் இழுக்கப்படுவதைக் காட்டும் வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News