Samudrika Shastra: மறைந்திருக்கும் ரகசியங்களை சொல்லும் பெண்களின் வயிறு

மனித உடலின் அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுகிறது சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுக்குகிறது சாமுத்ரிகா சாஸ்திரம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 22, 2021, 05:39 PM IST
  • சாமுத்ரிகா சாஸ்திரம் என்பது ஒரு நுண்கலை
  • ஜோதிடத்தின் ஓர் அங்கம் சாமுத்ரிகா சாஸ்திரம்
  • சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்களுக்கு கைவந்தக் கலை இது
Samudrika Shastra: மறைந்திருக்கும் ரகசியங்களை சொல்லும் பெண்களின் வயிறு title=

மனித உடலின் அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுகிறது சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுக்குகிறது சாமுத்ரிகா சாஸ்திரம். 

பொதுவாக, சிலை வடிப்பவர்கள், சித்திரம் வரைபவர்களும் இந்த சாத்திரத்தை கற்றுத் தேற வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த சாத்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் சிற்பங்களும் ஓவியங்களும் காலம் கடந்து புகழ்பெறுகின்றன.  

ஆண்களில் அழகன் எப்படி இருக்க வேண்டும்; பெண்களில் சிறந்த அழகி எப்படி இருக்க வேண்டும் என்றும் இலக்கணம் வகுத்துக் கூறுகிறது இந்த சாத்திரம். மனிதர்களின் உடல் அவயவங்களின் அடிப்படையில் ஒரு ஆண் அல்லது பெண்ணின் இயல்புகள் எப்படி இருக்கும் என்றும் இந்த சாத்திரம் விளக்குகிறது.

ஜோதிடம் என்பது விஞ்ஞானத்தின் ஒரு கிளை ஆகும், இதில் மனித உடலின் பாகங்கள் மற்றும் அதன் அமைப்புகளின் அடிப்படையில்  அவர்களின் எதிர்காலத்தையும் கணிக்க முடியும் என்பது சாமுத்ரிகா வல்லுநர்களின் கூற்று ஆகும். இந்த பழங்கால முறையில், தலை முதல் கால் வரை மனிதனின் ஒவ்வொரு பகுதி பற்றியும் கூறப்பட்டுள்ளன. 

Also Read | 21 வயதானால் மேலாடை அணியாமல் விருந்து கொடுத்து கன்னித்தன்மையை நிரூபிக்கும் கலாசாரம்

மறைக்கப்பட்ட இரகசியங்களை சொல்லும் வயிறு 

சாமுத்ரிகா சாஸ்திரத்தின்படி, மேடிட்ட வயிற்றைக் கொண்ட பெண்கள் அதிக கவர்ச்சியானவர்கள். பல ஆண்களையும் ஈர்பவர்களாக அந்த பெண்கள் இருப்பார்கள். மேடிட்ட வயிற்றைக் கொண்டிருக்கும் பெண்களுக்கு நன்றாக உடை அணிந்து அழகாக இருக்க பிடிக்கும்.

ஒப்பனை மற்றும் புதிய ஆடைகளுக்காக அந்தப் பெண் நிறைய செலவு செய்வார். அவரது வாழ்க்கைத் துணைவர் மிகவும் கடின உழைப்பாளியாக இருப்பார் என்றும், அவர்கள், இந்த பெண்ணை பெரிதும் பாராட்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது. பொதுவாக இந்த வகை வயிறு உள்ள ஒரு பெண் தன் கணவனால் திருப்தி அடைவதில்லை.

ஒரு பெண் அல்லது ஆணின் வயிற்றில் கோடு இருந்தால், அவள்/அவன் பல வேதங்களை அறிந்திருப்பார்கள். அவர்களுக்கு குடும்பத்திலும் சமூகத்திலும் சிறப்பு இடம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Also Read | சுயஇன்பம் செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா? ஆய்வு சொல்வது என்ன?

வயிறு மிகவும் அழகாக இருக்கும் பெண்கள் அதிர்ஷ்டசாலிகள். மென்மையான, மெலிந்த மற்றும் அழகான வடிவ வயிறு சுபமானது. அத்தகைய பெண்கள் எந்த துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வாழ்வில் பல சாதனைகளை செய்வார்கள்.

பெண்களின் வயிறு, நல்ல வடிவம் இல்லாமலும், அழகாக தோன்றாவிட்டாலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய போராட வேண்டியிருக்கும்.  

ஒரு பெண்ணின் வயிறு இடுப்பைப் போல தடிமனாக இருந்தால், அத்தகைய பெண் எந்த சூழ்நிலையிலும் சோர்ந்து போகமாட்டார். இந்தப் பெண்கள் பணம் தொடர்பான விஷயங்களில் கூட சமரசம் செய்துக் கொள்ள மாட்டார்கள்.  

(குறிப்பு- இந்த கட்டுரையில் வெளியிடப்பட்ட தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் ஜோதிடர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டது.)

ALSO READ | உலகின் மிகப்பெரிய குடும்பம்... ஒன்றல்ல இரண்டல்ல.. 27 மனைவிகள், 150 குழந்தைகள்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News