Love You Maa: அம்மாவுக்கு பிறந்த நாள்! மகன் செய்த காரியத்தை பாருங்கள்
Mother Child Video: அம்மாவுக்கு அழகாக பிறந்த நாள் வாழ்த்துக்கூறிய சிறுவன். சமூக ஊடங்களில் வைரல்.
Mother Child Video: இந்த உலகில் உங்களிடம் எத்தனை பேர் அன்பு காட்டினாலும், நமது தாயின் அன்புக்கு ஈடாகாது. தாயின் அன்பு மிகவும் புனிதமானது. அதை யாராலும் கொடுக்க முடியாது. பத்து மாதம் பிள்ளையை சுமப்பதில் இருந்தே தொடங்கி, நமது குடும்பத்துக்காகவே வாழும் தேவதை தான் "அம்மா". உலகத்தில் அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு உயிர் அம்மா தான். அப்படிப்பட்ட அம்மாவுக்கு பிறந்த நாள் என்றால், பிள்ளைகள் சும்மாவா இருப்பார்கள். தற்போதைய இன்டர்நெட் வாழ்க்கையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிவிடுவார்கள். அதுவும் குழந்தைகள், அம்மாவுக்கு சொல்லும் வாழ்த்துக்கள் மிகவும் ரசிக்கும்படி இருக்கும். அந்த அழகான தருணத்தை பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துக்கொள்கிறார்கள். அதில் பல வீடியோக்கள் அனைவராலும் விரும்பப்படுகிறது. அப்படி ஒரு வீடியோவைக் குறித்து தான் இன்று நாம் பார்க்க உள்ளோம்.
அன்னையின் பிறந்த நாள் அன்று, அம்மாவை ஆச்சரியமடைய செய்த மகன்
அந்த வீடியோவில் "வீட்டின் கதவு திறந்து இருக்கிறது. உள்ளே ஒரு குட்டி பையன் நுழைகிறார். அவருடன் வேறவொரும் வருகிறார். அவரிடம் உஸ்ஸ் (சத்தம் போடதே) எனக்கூறிக்கொண்டே, அந்த குட்டி பையன் அமைதியாக, அம்மா வேலை செய்துக்கொண்டு இருக்கும் அறையை நோக்கி செல்கிறார். அப்பொழுது குட்டி பையயுடன் வரும் அந்த நபரின் கையில் "மெழுகுவர்த்தி ஏற்றப்பட்ட கேக்" வைக்கப்பட்ட தட்டு இருக்கிறது. அதை அந்த குட்டி பையனிடம் கொடுக்கிறார். இது பார்ப்பதற்கு மிகவும் அழகிய தருணமாக இருக்கிறது.
மேலும் படிக்க: என்ன அடிச்சிட்டு நீ அழுகுறியே...குழந்தையை பார்த்து குழம்பிய பூனை!
அன்பு முத்தங்கள்
இப்போது இருவரும் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். அதன்பின்னர், "மெழுகுவர்த்தி ஏற்றப்பட்ட கேக்" தட்டுடன் தனது அன்னையை நோக்கி செல்கிறார். பிறந்த நாள் அன்று, தனது மகன் கேக்குடன் வருவதை பார்த்த அன்னை, சந்தோசத்தால், தேங்க்யூ எனக்கூறிக் கொண்டு, மகனை அணைத்து தனது அன்பு முத்தங்களை பரிமாறிக் கொண்டார். இந்த வீடியோ காட்சி அனைவரையும் கவந்துள்ளது.
இந்த வீடியோ Amit Perumal என்ற நபரால் முகநூலில் பகிரப்பட்டுள்ளது. பலரும் வாழ்த்து தெரிவித்து லைக் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: என்ன அடிச்சிட்டு நீ அழுகுறியே...குழந்தையை பார்த்து குழம்பிய பூனை!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR